(1850)
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் மாலை
ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே.
பதவுரை
|
வேலை |
– |
(பிரளயக்) கடலிலே |
|
ஆல் இலை |
– |
ஆலந்தளிரிலே |
|
பள்ளி விரும்பிய |
– |
திருக்கண் துயில்வதை உகந்தருளினவனும் |
|
பாலை |
– |
பால்போன்றவனும் |
|
ஆர் அமுதத்தினை |
– |
அருமையான அமிருதம் போன்றவனும் |
|
பைந்துழாய் |
– |
பசுமைதங்கிய திருத்துழாயை யுடையவனும் |
|
ஞாலம் உன்னியை |
– |
உலகத்தவர்களெல்லாராலும் தியானிக்கப்படுபவனுமான |
|
மாலை |
– |
ஸர்வேச்வரனை |
|
ஆலியில் கண்டு மகிழ்ந்து |
– |
திருவாலியில் ஸேவித்து ஆநந்தித்து |
|
நாங்கூரிலே போய் காண்டும் |
– |
திருநாங்கூரிலே சென்று ஸேவிப்போம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரளயப் பெருங்கடலில் உலகமனைத்தையும் உட்கொண்டு ஆலந்தளிரில் திருக்கண் துயில்கொண்ட பெருமானைத் திருவாலியிலே கண்டோம், இனித் திருநாங்கூரிலே சென்று காணக் கடவோமென்கிறார்.
வேலை –‘வேலா’ என்னும் வடசொல் விகாரம், கடற்கரையை உணர்த்தும் இச்சொல் இலக்கணையால் கடலை உணர்த்துகின்றது.
ஞாலமுன்னி – இதற்கு இரண்டுவகையாகப் பொருள் கொள்ளலாம். உலகத்தைச் சிந்திப்பவன், உலகத்தால் சிந்திக்கப்படுபவன் என்று. உலகத்தைச் சிந்திப்பவன் என்றது -உலகத்துக்கு ரக்ஷணம் செய்யும்படிகளையே சிந்தித் திருப்பவன் என்றபடி.
English Translation
The Lord who slept as a child in the ocean floating on flag leaf, my precious ambrosia. I the cool Tulasi-garland-Lord – we enjoyed him Darshan in Tiruvall; today we shall go and have his Darshan in the wold-renowned Tirunangur
