(1832)
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து,
வானமும்மண் ணகமும் அளந்த திஜீவிக் கிரமன்,
தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,
வானவர் கோனையின் று வணங்கித்தொழ வல்லள் கொலோ.
பதவுரை
| தானவன் |
– |
(மஹாபலியென்னும்) அசுரனுடைய |
| வேள்வி தன்னில் |
– |
யாகத்திலே |
| தனியே |
– |
அத்விதீயனான |
| குறள் ஆய் |
– |
வாமநமூர்த்தியாய் (எழுந்தருளி) |
| நிமிர்ந்து |
– |
(உதகதானம் பெற்றவாறே) ஓங்கிவளர்ந்து |
| வானமும் |
– |
மேலுலகங்களையும் |
| மண் அகமும் |
– |
கீழுலகங்களையும் |
| திரி விக்கிரமன் |
– |
த்ஜீவிக்ரம மூர்த்தியானவனும் |
| தேன் அமர் பூ பொழில் சூழ் |
– |
தேன்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட |
|
திருமாலிருஞ்சோலையில் |
||
| நின்ற |
– |
நிற்பவனுமான |
| வானவர் கோனை |
– |
தேவாதிதேவனை |
|
(என்பெண்மகள்) |
||
| இன்று |
– |
இப்போது |
| வணங்கி தொழவல்லள் |
– |
ஸேவிக்கப்பெறுவளோ? |
English Translation
The Lord came to the Asura Mabali;s sacrifice as a manikin, then grew as Trivikrama and measured the Earth and sky. He is the Lord of celestials residing in Tirumalirumsolai amid honey-dripping flower groves. Will my daughter be able to bow and worship him today? I wonder!
