(1830)
உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல்,
கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,
திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே.
பதவுரை
| உலகு எழினையும் |
– |
ஸப்தலோகங்களையும் |
| உண்டு |
– |
(பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி |
| ஒரு பாலகன் |
– |
ஒரு சிறுகுழவியாய் |
| ஆல் இலை மேல் |
– |
ஓராலிலையின்மீது |
| கண் துயில் கொண்டு |
– |
திருக்கண்வளர்ந்தருளி |
| உகந்த |
– |
திருவுள்ள முவந்த |
| கரு மாணிக்கம் |
– |
பெரிய கருமாணிக்கமலை போன்ற வடிவையுடைய |
| திண் திறல் மா கரி சேர் |
– |
மிக்க வலிமை வாய்ந்த மதயானைகள் சேரப்பெற்ற |
| திருமாலிருஞ்சோலை |
– |
திருமாலிருஞ்சோலை மலையில் |
| நின்ற |
– |
நிற்பவனுமான |
| அண்டர் தம் கோவினை |
– |
தேவாதிதேவனை |
| என் ஆய் இழை |
– |
சுத்தமான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள் |
| இன்று |
– |
இப்போது |
| அணுகும் கொல் |
– |
கிட்டப்பெறுவளோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கருமாணிக்க மாமலையை – மாணிக்கம் கரிய நிறத்தன்றாதலால் இதனை இல்பொருளுவமை -(அபூதோபமை) யாகக் கொள்க.
“அண்டர்“ என்று இடையர்க்கும் தேவர்க்கும் பெயர். ஆயிழை – ஆய்தல் – ஆராய்தல், நல்லதாகப் பார்த்தெடுத்த அணியப்பட்ட ஆபரணங்களையுடையவள் என்கை, வினைத்தொகையன்மொழி.
English Translation
The Lord who swallowed the seven worlds and slept as a child on a fig leaf is the Lord of the celestials. He is a dark mountain gem, residing in Tirumalirumsolai amid strong wild elephants. Will my tastefully jewelled daughter reach him today? I wonder!
