(1823)

(1823)

விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக் கிளங்கன்று விசிறி,

குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த கூத்தவெம் மடிகள்தம் கோயில்

தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறென்று முனிந்து

மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

 

பதவுரை

மடநெஞ்சே!-

விடம் கலந்து

(பிரதிகூலர்மேல் உமிழ்வதற்காக) விஷத்தோடே கூடி

அமர்ந்த

வாய்ப்பாக அமைந்த

அரவு அணை

திருவனந்தாழ்வானாகிற படுகையில்

துயின்று

பள்ளிகொள்பவனாயிருந்து

(அதைவிட்டுத் திருவாய்ப்பாடியிலே வந்து பிறந்தருளி)

முன்

முன்பொருகால்

விளங்கனிக்கு

(அஸுராவேசங்கொண்ட) விளாம்பழத்தின்மீது

இன கன்று

(அப்படியெ அஸுரா வேசங் கொண்ட ஒரு கன்றுகுட்டியை

விசிறி

வீசியெறிந்தவனாயும்

குடம் கலந்து ஆடி

பலகுடங்களைச் சேர்த்தெடுத்தாடினவனாயும்

குரவை கோத்த

ராஸக்ரீடை நடத்தினவனாயும்

கூத்த

இப்படிப்பட்ட பலவகையான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையனாயுமுள்ள

எம் அடிகள் தம்

எம்பெருமானுடைய கோயில்

(மேகங்களானவை)

தட கடல்

ஆழ்ந்தகடலிலே

முகந்து

நீரைமொண்டுகொண்டு

விசும்பு இடை

ஆகாசத்திலே (ஏறி)

பிளிற

சுர்ஜிக்க, (அதைக்கேட்டு)

மடங்கல்

சிங்கமானது

தட வரை களிறு என்று முனிந்து

பெரிய மலையிலுள்ள யானை (கர்ஜிக்கிறது) என்றெண்ணிச் சீற்றங்கொண்டு

நின்று அதிரும்

நிலைநின்று பிரதிகர்ஜிக்கப் பெற்ற

மாலிருஞ்சோலை, வணங்குதும் வா.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கடல் மணலே மிகுதி யென்னலாம்படியாக நீர்ப் பகுதியை முழுதும் முகந்துகொண்ட மேகங்கள் ஆகாசத்தை ஏறிப் பரமகம்பீரமாக முழங்க அம்முழக்கத்தைச் செவியுற்ற சிங்கம் மலையிலுள்ள யானையை இப்படி அச்சங்கெட்டுக் கர்ஜிக்கின்றதென்று மயங்கி “நாம் வாழுமிடத்திலே யானையும் இப்படி செருக்குக் கொள்ளக் கடவதோ?” என்று சீறி அதற்குப் பிரதிகர்ஜனை செய்ய பெற்றதாம் இத்திருமலை. மடங்கல் – சிங்கம்.

 

English Translation

O Frail Heart! The Lord who reclines on a venom-spitting serpent came then as a cowherd-lad and threw a demon calf against a wood-apple tree, then danced with pots, and blended with the cowherd-dames in their Kuravai dance.  He resides in Malirumsolai where dark monsoon clouds rise from the ocean and roar in the sky, and lions taking them to be elephants, roar back in anger.  Come, let us offer worship there

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top