(1821)

(1821)

சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச் சுடுசரம் அடுசிலைத் துரந்து

நீர்மையி லாத தாடகை மாள நினைந்தவர் மனம்கொண்ட கோயில்

கார்மலி வேங்கை கோங்கலர் புறவில் கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்

வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

 

பதவுரை

சூர்மையில் ஆய்

கொடுமையாடு கூடின

பேய்

(பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய

முலை

(விஷந்தீற்றிய) முலையை

சுவைத்து

(அவளுயிர்மாளச்) சுவைத்துண்டவனாய்

சுடு சரம்

கொடிய அம்புகளை

அடு சிலை துரந்து

பகைவரை முடிக்கவல்ல வில்லிலே தொடுத்துவிட்டு

நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர்

இரக்கமற்றவளான தாடகைமுடியும்படி ஸங்கல்பித்தவனான பெருமான்

மனம் கொண்ட கோயில்

திருவுள்ளம்பற்றி வாழுமிடமாய்

கால் மலி

மேகமண்டலம்வரை ஓங்கிவளர்ந்த

வேங்கை

வேங்கைமரங்களும்

கோங்கு

கோங்குமரங்களும்

அலர்

விகஸிக்கப்பெற்ற

புறவில்

பொழில்களிலே

கடி

பரிமளம்மிக்க

குறிஞ்சி மலரின்

குறிஞ்சிப்பூவினுடைய

நறு தேன்

செல்வித்தேனினுடைய

வார் புனல்

ப்ரவாஹம்

சூழ்

சூழப்பெற்றதான

தண் மாலிருஞ்சோலை, வணங்குதும், மடநெஞ்சே! வா-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சூர்மையில் ஆய -சூர்மையாவது சூரத்தனம், பயங்கரத்தன்மை, அதனோடு கூடிய என்றபடி. இனி, “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே“ என்கிற படியே, ;சூர் என்று தெய்வப்பெண்ணைச் சொல்லிற்றாகி, தெய்வப்பெண்ணாகிய யசோதைப் பிராட்டியின் வடிவுகொண்டு வந்தவளாகையாலே ஆரோபிதமான தெய்வப்பெண் தன்மையோடு கூடின என்று முரைக்கலாம்.

கார்மலிவேங்கை -நீலவேங்கைமரம் என்னவுமாம்.

 

English Translation

O Frail Heart! The Lord who decided to suck the poison breast of the terrible ogress Putana, and destroyed the unabashed demoness Tataka with fire-arrows, willingly resides in his temple at Malirumsolai where vengai and kongu trees grow fall in dense groves that overflow with the honey of mountain flowers. Come, let us offer worship there

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top