(1806)
நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,
சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,
என்றும் மிரவும் பகலும் வஜீவண் டிசைபாட,
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே.
பதவுரை
தொண்டர்காள் |
– |
பகவத்பக்தர்களே! |
நின்ற வினையும் |
– |
ஸஞ்சிதகருமங்களும் |
துயரும் |
– |
ப்ராரப்தகருமங்களும் |
கெட |
– |
ஒழியும்படியாக |
மா மலர் |
– |
சிறந்த புஷ்பங்களை |
ஏந்தி |
– |
எடுத்துக்கொண்டு |
இரவும் பகலும் என்றும் |
– |
இரவும் பகலுமாகிய எக்காலத்திலும் |
வரி வண்டு இசை பாட |
– |
வஜீவண்டுகள் இசை பாடப்பெற்றதும் |
குன்றின் முல்லை |
– |
மலையிலுள்ள முல்லைப் பூக்கள் |
மன்றிடை |
– |
வெளிநிலங்களிலே |
நாறும் |
– |
கமழப்பெற்றதுமான |
குறுங்குடி |
– |
திருக்குறுங்குடியை |
சென்று |
– |
அடைந்து |
பணிமின் |
– |
ஸேவியுங்கள் |
தொழுமின் |
– |
அஞ்ஜலிபண்ணுங்கள், |
எழுமின் |
– |
(இவ்வகையாலே) உஜ்ஜீவிக்கப்பாருங்கள் |
English Translation
O Devotees! Destroy your past karmas and travails. With fresh flowers culled from the mountains, -where night and day the inebriate bees sing over fragrant Mullai creepers, -come offer worship, serve and be elevated