(1805)

(1805)

நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள்,

ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள்,

தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் கூர்வாய்

நாரை பேடையொ டாடும் குறுங்குடியே.

 

பதவுரை

நம் தமர்காள்

நம்மோடொத்த பகவத்பக்தர்களே!

நார் ஆர் இண்டை

நார்களில் நெருங்கக் கோக்கப்பட்ட மாலைகளையும்

நாள் மலர்

அப்போதலர்ந்த பூக்களையும்

கொண்டு

ஏந்திக் கொ;ண்டு

ஆரா அன்போடு

பரபக்தியுக்தராய்க் கொண்டு

(எம்பெருமான் ஊர் அடைமின்கள்)

வார்புனல்

நீண்ட நீர்நிலங்களிலே

மேய்ந்து

இரைமேய்ந்து

வயல்

வயல்களில்

வாழும்

வாழ்கின்ற

கூர் வாய் நாரை

கூர்மையுள்ள வாயலகுகளையுடைய நாரைகள்

பேடையோடு

பேடைகளுடனே

ஆடும்

களித்துவர்த்திக்கப்பெற்ற

குறுங்குடி

திருக்குறுங்குடியென்கிற

எம்பெருமான் ஊர்

திவ்யதேசத்தை

அடைமின்கள்

சென்று சேருங்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னைப்போலே பதியெபரவித்தொழுந் தொண்டர்களே! நல்ல புஷ்பங்களையும் தொடுத்த மாலைகளையும் கையிற்கொண்டு பரிபூர்ணபக்தியுடனே திருக்குறுங்குடியைச் சென்று சேருங்கள், அத்தலத்தில் அஃறிணைப் பொருள்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழுமாதலால் நீங்களும் அங்குச் சென்று வேண்டினபடி கிஞ்சித்கரிக்கப் பெற்றுக் களித்து வாழலாமென்றாராயிற்று.

தாரா – நீர்வாழ்பறவை.

 

English Translation

Devotees!  With fresh flower garlands, and hearts filled with love, come to offer worship to the Lord in kurungudi where sharp-beaked water-egrets rejoice with their mates in fields filled with Tara water birds

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top