(1803)
தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி,
தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள்,
மாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம் வானில்
கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே.
பதவுரை
தொண்டீர்காள் |
– |
தொண்டர்களே! |
தூ நீர் |
– |
பரிசுத்தியை யுடையரான நீங்கள் |
தீ |
– |
(தூபதீபங்களுக்கான) அக்நியையும் |
நீர் |
– |
(அர்க்கியத்துக்கான) தீர்த்தத்தையும் |
வண்ணம் மா மலர் |
– |
நாநாவர்ணமுடைய சிறந்த புஷ்பங்களையும் |
விரை |
– |
பரிமளத்ரவ்யங்களையும் |
ஏந்திக் கொண்டு |
– |
எடுத்துக்கொண்டு |
பாவி |
– |
(எம்பெருமானைத்) துதித்து |
தொழுமின் |
– |
தொழுங்கோள், |
எழுமின் |
– |
உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் |
வானில் |
– |
ஆகாசத்தில் |
கூன் நீர் |
– |
வளைந்திருப்பதை இயற்கையாகவுடைய |
மதியை |
– |
சந்திரனை |
மாடம் தீண்டும் |
– |
மாடங்கள் ஸ்பர்சிக்கும்படியாக ஓங்கியுள்ள |
குறுங்குடி |
– |
திருக்குறுங்குடியானது |
மா நீர் வண்ணர் |
– |
கடல் வண்ணரான பெருமாள் |
மருவி உறையும் இடம் |
– |
பொருந்தியாழுமிடமா யிருக்கின்றது. |
“கூனீர்“ என்பதில் “நீர்மை“ என்னும் பண்பு ஈறுபோயிற்று, நீர்மையாவது ஸ்வபாவம். |
English Translation
Devotees! Come pure and worship the Lord with praise, offering incense, water and fresh flowers, and be elevated. The ocean-hued Lord desiringly has his abode in kurungudi, where mansions touch the Moon