(1802)
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்
ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும்,
மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான்,
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே.
பதவுரை
|
கொவ்வைக் கனிவாய் |
– |
கோவைப்பழம்போற் சிவந்த வாயையுடைய |
|
கிள்ளை |
– |
கிளிகளானவை |
|
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான் |
– |
மையிட்டு விளங்குகின்ற கண்களையுடைய பெண்களில் பேச்சுப்போல |
|
பேசும் |
– |
பேசுமிடமான |
|
குறுங்குடி |
– |
திருக்குறுங்குடியானது |
|
அன்று |
– |
முன்பொருகால் |
|
அமரில் |
– |
பாரதயுத்தத்தில் |
|
கவ்வை களிறு மன்னர் |
– |
பேரொலிகொண்ட யானைகளை யுடையவரான அரசர்கள் |
|
மாள |
– |
மாண்டுபோம்படியாக |
|
ஐவர்க்கு ஆய் |
– |
பஞ்சபாண்டவர்களுக்காக |
|
கலி மா தேர் |
– |
திண்ணிய பெரியதேரை |
|
உய்த்தான் |
– |
நடத்தின பெருமானுடைய |
|
ஊர்போலும் |
– |
திவ்யதேசமாகும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பாரதப்போரில் பாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து எதிரரசர்கள் தொலையும்படியாகப் பார்த்தஸாரதியாய்த் தேரைநடத்தின பெருமான் அப்படிப்பட்ட ஆச்ரிதபக்ஷபாதம் இன்னமும் விளங்கத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருக்குறுங்குடி. இத்தலம், கிளிகள் பெண்களைப்போலே அழகாகப் பேசும்படியான நிலைமை வாய்ந்தது.
களிறு+மன்னர், களிற்று மன்னர் கவ்வை என்று இரைச்சலுக்குப் பெயர், பெரிய கோஷம் செய்யவல்ல யானைகளென்றபடி.
கொவ்வைக் கனினாய்க்கிள்ளை -கிளிகளுக்குக் கோவைப்பழம் இனிய உணவாதலால் கொவ்வைக் கனியை வாயிலையுடைய கிளி என்று முரைக்கலா மென்ப.
English Translation
The red berry-beaked parrots speak like the collyrium-lined bright-eyed dames in kurungudi. It is the abode of the Lord who drove the chariot for the five in the war that killed many elephant-seated mighty kings
