(1801)
சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று, அரக்கன்
உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும்,
இரவும் பகலும் ஈன்தேன் முரல,மன்றெல்லாம்
குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே.
பதவுரை
|
இரவும் பகலும் |
– |
எப்போதும் |
|
தேன் |
– |
வண்டுகள் |
|
ஈன் |
– |
இனிமையாக |
|
முரல |
– |
ரீங்காரஞ் செய்யப் பெற்றதும் |
|
மன்று எல்லாம் |
– |
வெளிநிலமுழுதும் |
|
குரவின் பூவேதான் |
– |
குருவம்பூக்களே |
|
மணம் நாறும் |
– |
பரிமளிக்கப்பெற்றதுமான |
|
குறுங்குடி |
– |
திருக்குறுங்குடியானது |
|
முன் |
– |
முன்பு (ராமாவதாரத்தில்) |
|
அரக்கன் |
– |
இராவணனென்னும் ராக்ஷஸனது |
|
சிரம் ஐந்தும் ஐந்தும் |
– |
பத்துத் தலைகளும் |
|
சிந்த |
– |
சிதறும்படி |
|
சென்று |
– |
(இலங்கைக்கு) எழுந்தருளி |
|
உரமும் கரமும் |
– |
(அவனது) மார்பையும் கைகளையும் |
|
துணித்த |
– |
துணித்தொழித்தவனான |
|
உரவோன் |
– |
பெருமிடுக்குடைய பெருமானுடைய |
|
ஊர்போலும் |
– |
திவ்யதேசமாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிரஸ், உரஸ் என்ற வடசொற்கள் மறையே சிரம், உரம் எனத் திரிந்தன. கரம் -தற்சம வடசொல். உரவோன் -உரமுடையவன், உரமாவது வலிமை. மன்று நாற்சந்தி.
English Translation
Night and day the bees hum sweetly while the fragrance of the Kuravu trees spreads everywhere in kurungudi. It is the abode of the strong Lord who went to Lanka and cut the arms and chest of the ten-headed demon king
