(1799)
துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள்,
பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்,
செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும்,
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே.
பதவுரை
செம் கால் |
– |
சிவந்தகால்களையுடைய |
அன்னம் |
– |
அன்னப்பறவை |
திகழ் தண் பணையில் |
– |
அழகிய குளிர்ந்த நீர் நிலைகளிலே |
கொங்கு ஆர் கமலத்து அலரில் |
– |
மணம்மிக்க தாமரைப்பூவில் |
பெடையோடும் |
– |
பேடையுடனே |
சேரும் |
– |
சேர்ந்துவாழுமிடமான |
குறுங்குடி |
– |
குறுங்குடியானது |
துங்கம் |
– |
ஓங்கினவைகளாய் |
ஆர் அரவம் |
– |
பெரிய ஆரவாரத்தை யுடையவைகளான |
திரை |
– |
அலைகள் |
வந்து உலவ |
– |
வந்து வீச |
தொடு கடலுள் |
– |
ஆழ்ந்த திருப்பாற்கடலிலே |
பொங்கு ஆர் அரவில் |
– |
பெரிய திருமேனி வாய்ந்த திருவனந்தாழ்வான் மீது |
துயிலும் |
– |
திருக்கண்வளர்ந்தருளா நின்ற |
புனிதர் |
– |
பரமபவித்திரரான பெருமாளுடைய |
ஊர் போலும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளுமழகு எளியர்க்குக் கிட்ட வொண்ணாதிருக்குமென்பது மாத்திரமேயல்லாமல் பிரமன் முதலியோர்க்குங்கூட இக்கரையிலே நின்று கூப்பிட வேண்டும்படியிருக்குமாதலால் அவ்வருமையைப் போக்கி எல்லார்க்குமெளியனாக எழுந்தருளியிருக்குமிடம் திருக்குறுங்குடி யென்கிறார்.
துங்கார் -துங்கம் என்பது வடசொல், உந்நதம் என்றபடி, ‘துங்கார்’ என்றது விகாரப் புணர்ச்சி. பொங்கு+பொங்கார், பொங்கு-முதனிலைத் தொழிற்பெயர், பொங்குதல் நிறைந்த அரவம் என்றபடி, எம்பெருமான் இடைவிடாது தன்மேல் சாய்ந்தருளப் பெறுவதனுலுண்டாகிய மகிழ்ச்சி மிக்கவன் என்றபடி.
பணை -நீர் நிலம் “பண்ணை” என்பதன் தொகுத்தல்.
English Translation
The waves of the roaring ocean come touching the feet of the pure Lord who reclines in its midst, on a serpent bed. His abode is kurungudi where swans with red feet nestle with their mates in beds of fragrant lotus blossoms amid cool lakes