(1797)

(1797)

செற்றவன் தென்னிலங் கைமலங்கத் தேவர்பி ரான்திரு மாமகளைப்

பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரரு ளாளன் பெருமைபேசக்

கற்றவன் காமரு சீர்க்கலியன் கண்ணகத் தும்மனத் துமகலாக்

கொற்றவன் முற்றுல காளிநின்ற குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்

பதவுரை

தென் இலங்கை

தென் திசையிலுள்ள இலங்கா புரியானது
மலங்க

கலங்கும்படியாக
செற்றவன்

த்வம்ஸம்பண்ணினவனும்
தேவபிரான்

தேவர்களுக்குப் பிரபுவானவனும்
திரு மாமகனை டிபற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட

பெரிய பிராட்டியாரைப் பெற்றுவைத்தும் என் மனதைக் கோயிலாகக்கொண்டுள்ளவனுமான
பேரருளாளன்

பேரருளாளப்பெருமானுடைய
பெருமை

பெருமையை
பேச கற்றவன்

அருளிச் செய்ய வல்லவரும்
காமரு சீர்

விரும்பத்தக்க குணங்களை யுடையவருமான
கலியன்

திருமங்கையாழ்வாருடைய
கண்ணகத்தும்

கண்களினுள்ளும்
மனத்தும்

நெஞ்சினுள்ளும்
அகலா

விட்டுநீங்காத
கொற்றவன்

ஸர்வேச்வரனாய்
முற்றுலகு ஆளி

ஸகலலோகநாதனான பெருமான்
நின்ற

நித்யவாஸம்பண்ணப்பெற்ற குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மற்ற திருமொழிகளின் கடைப்பாசுரத்தில் பயனுரைத்துக் தலைக் கட்டுமாபோலே இப்பாசுரத்தில் இல்லை, ஆயினும் இதுகற்றார்க்குத் திருக்குறுங்குடி சேருவதே பயனாகும் என்று உணர்த்துகின்றமை உய்த்துணரத்தக்கது.

English Translation

The Lord of gods who burnt the city of Lanka, the benevolent Lord who is forever with the lotus-dame Lakshmi and yet graces my heart, the Lord who never leaves the heart and sight of the praise-singer kaliyan, the Lord who rules the universe, resides in kurungudi, so carry me there

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top