(1795)
கேவல மன்று கடலினோசை கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என்
ஆவி யளவும் அணைந்துநிற்கும் அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு
ஏவலங் காட்டி இவனொருவன் இப்படி யேபுகுந் தெய்திடாமுன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
பதவுரை
|
கடலின் ஓசை |
– |
ஸமுத்ரகோஷமானது |
|
கேவலம் அன்று |
– |
ஸாமாந்யமன்று; |
|
கேண்மின்கள் |
– |
கேளுங்கள் ; |
|
ஆயன் |
– |
கோபாலனுடைய |
|
கை |
– |
கையிலுள்ள |
|
ஆம்பல் வந்து |
– |
குழலோசை வந்து |
|
என் ஆவி அளவும் அணைந்து நிற்கும் |
– |
என்னுடைய பிராணன் வரையில் கிட்டி நிற்கின்றது; |
|
அன்றியும் |
– |
அதற்கு மேலும் |
|
இவன் ஒருவன் |
– |
(மன்மதனென்கிற) இப்பாவியொருவன் |
|
ஐந்து கணை |
– |
தனது) பஞ்சபாணங்களை |
|
தெரிந்திட்டு |
– |
நன்றாக ஆராய்ந்து |
|
ஏவலம் காட்டி |
– |
பிரயோகிக்க வல்லஸாமர்த்தியத்தைக் காண்பித்து |
|
இப்படியே புகுந்து |
– |
என்மேல் நோக்கம் வைத்து |
|
எய்திடா முன் |
– |
பிரயோகிப்பதற்கு முன்னமே |
|
கோவலர்கூத்தன் |
– |
இடைச்சாதிக்கு ஏற்ற கூத்துகளில் வல்லவனான பெருமானுடைய |
|
குறிப்பு |
– |
திருவுள்ளக்கருத்தை |
|
அறிந்து |
– |
தெரிந்துகொண்டு |
|
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதுவரையிலும் கடலோசைகள் பலபல செவிப்பட்டிருந்தாலும் இப்போது செவிப்படும் கடலோசை அவைபோல்வதன்று; இதுஇன்று முடித்தே விடுமதாய்ப் பிரபலமாயிராநின்றதென்கை. ஸுக்ஜீவமஹாராஜா; ஸ்ரீராமபிரானை அண்டைகொண்டுவந்து வாலியின் மனைவாசலிலே சென்று அறை கூவினபோது அவருடைய மிடற்றோசைக்கு எப்படிப்பட்ட மிடுக்கு இருந்ததோ, அப்படிப்பட்ட மிடுக்கு இக்கடலோசைக்கு உண்டுபோலும்.
கடலோசை தனக்குப் பாதகாமாயிருப்பது போலவே மற்றையோர்க்கும் பாதகமாகவே யிருக்குமெனக் கருதி ‘கேண்மின்கள்’ என்கிறாள்; இக்கடலோசை உங்கள் காதில் படுகிறதில்லை போலும்; சிறிது உற்றுச் செவிகொடுத்துக் கேட்டுப்பாருங்கள்; இது படுத்துகிறபாடு உங்களுக்கே தெரியவரும் என்கிறாள் போலும்.
இஃது ஒன்றையோ? இடையன் ஊதுகிற புல்லாங்குழலின் ஓசையும் வந்துஎன் உயிரை முடிக்குமளவிலே நிற்கின்றது பாரீர் என்கிறாள் ஆயன் கையாம்பல் வந்து என்னாவியளவுமணைந்து நிற்கும் என்று.
ஆம்பல்-இலைக்குழல்.
அதற்குமேலே, ‘இவள் கடலோசைக்கும் குழலோசைக்கும் முடிந்தாளாக்கூடாது, நம்முடைய கையிலுள்ள அம்புகளாலே முடிந்தாளகவேணும்’ என்று கருதிய * கருப்புவில் மலர்க்கணைக் காமனானவன் பெண்களை வதை செய்யத்தகாதே என்றும் நோக்காமல் கண்ணற்று முடிக்கவல்ல சில அம்புகளை ஆராய்ந்து தொடுத்துத் தன்னுடைய பிரயோகஸாமர்த்தியத்தைக் காட்டுதற்கு முன்னே என்னைத் திருக்குறுங்குடியிற் கொண்டு சேர்த்திடுங்கள் என்கிறாள்.
ஏவலம் = ஏ-எய்வதில், வலம்-வல்லமை என்றபடி. இவனொருவன் = பெண்களைக் கொலை செய்ய வல்லவர்களை எண்ணத் தொடங்கினால் இவனை யெண்ணிப் பின்னை யெண்ணுதற்கு வேறு ஆளில்லாத அதிவிதீயன் என்றபடி.
‘இப்படியேபுகுந்து’ என்றவிடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையருளிச் செய்வது;- “இதுக்கு இட்டுச் சொல்லலாவதொரு பாசுரமில்லை; புண்ணறைகளைக் காட்டுமித்தனை.” என்று “ஓர்மீனாய கொடி நெடுவேன் வலிசெய்ய மெலிவேனோ” என்றாள் கீழே திருவாலிப்பதிகத்திலும். ஆசை ஆதிகரித்துச் செல்லுவதையும், அதுகைகூடாமையாலே கஷ்டம் மீதூர்ந்து செல்லுவதையும் காமனுடைய ஹிம்ஸையாகச் சொல்லுவது மரபு.
கோவலர்கூத்தன் குறிப்பறிந்து = தான் ஆடுகிற கூத்தின்; இனிமையாலே முரட்டாண்களான கோவலர்களையும் ஈடுபடுத்திக் கொள்பவன் என்பது ‘கோவலர்கூத்தன்’ என்றதன் உட்கருத்து. வன்னெஞ்சர்களான தன்னோடொத்த பருவத்துப் பிள்ளைகளைப் படுத்துகிறபாடே அதுவானால் அபலைகளான நமக்குச் சொல்ல வேணுமோ என்கை. அவனுடைய திருவுள்ளக் கருத்தையறிந்து அங்கே கொண்டு சேர்த்திடுங்கள் என்றதன் கருத்தாவது-அவன் வேணுமென்றிருந்தானாகில் அங்கே கொண்டுபோய்ப் பொகடுங்கோள்; வேண்டாவென்றிருந்தானாகில் இவ்விடத்தே முடித்திடுங்கோள் என்பதாம்.
English Translation
Pray head me, the roar of the sea is not alone! The cowherd;s flute melody already throttles my soul. And then this deft archer Madana, god of love, has his flower-arrows aimed at me. Before he comes in and shoots, know the cowherd dancer;s mind and carry me to his abode in kurungudi, now
