(1792)
திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற கோல இளம்பிறை யோடுகூடி
பண்டைய வல்லவிவை நமக்குப் பாவியே னாவியை வாட்டஞ்செய்யும்
கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
பதவுரை
|
திண் திமில் |
– |
திடமான முசுப்புடைய |
|
ஏற்றின் |
– |
விருஷபத்தினுடைய |
|
மணியும் |
– |
கழுத்துமணியும் |
|
ஆயன் |
– |
இடையனுடைய |
|
தீம் குழல் ஓசையும் |
– |
மதுரமான புல்லாங்குழ லொழியும் |
|
தென்றலோடு கொண்டது ஓர்மாலையும் |
– |
தென்றற்காற்றோடு ஒருமித்த கோட்பாட்டை யுடையதான மாலைப்பொழுதும் ஆகிய |
|
இவை |
– |
இவை |
|
அந்தி ஈன்ற |
– |
அந்திப்பொழுது தோற்றுவிக்கிற |
|
கோலம் இளபிறை யோடு கூடி |
– |
அழகிய இளம்பிறைச் சந்தி ரனையும் துணைகூட்டிக் கொண்டு |
|
நமக்கு |
– |
நம் விஷயத்திலே |
|
பண்டைய அல்ல |
– |
முன் இருந்தாற்போலிருக்கின்றனவில்லை; |
|
பாவியேன் |
– |
பாவியான என்னுடைய |
|
ஆவியை |
– |
உயிரை |
|
வாட்டம் செய்யும் |
– |
வாடச் செய்கின்றன; |
|
(ஆகையாலே) |
||
|
கொண்டல் மணி நிறம் வண்ணர் |
– |
மேகத்தினுடையவும் நீலமணியினுடையவும் நிறம் போன்ற நிறமுடைய பெருமாள் பொருந்திவாழப்பெற்ற |
|
குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாட்டின் மணியோசை, தென்றல்காற்று, மாலைப்பொழுது, இளம்பிறை ஆகிய இவை பலகாலும் நம்மை வருத்தியிருந்தாலும் இப்போது வருத்துகிறபடி இதற்கு முன்பு ஒருநாளுமில்லை; இவை ஒவ்வொன்றும் தனித்தனியே கொலைசெய்யப் போதுமானவை; கூட்டமாகக் கூடி வந்து நலிகிற இந்நாள் அந்தோ! பாதை பொறுக்கப் போகின்றதில்லை; ஸாதாரண விஷயங்களை ஆசைப்படாதே * உயர்வற வுயர்நலமுடையவனாய் அயர்வறுமரர்களதிபதியானவனை ஆசைப்படும்படியான பாவத்தைப் பண்ணின என்னுடைய ஆவி இனித் தரிக்கவிரகில்லை; நான் வாழவேண்டில் திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்ந்திடுங்கள்; அங்கே எழுந்தருளியிருக்கின்ற கொண்டல் மணிநிறவண்ணரைக் கண்டவாறே என்வாட்டமெல்லாம் தீரும்; மேகத்தையும் மணியை யுங்கண்ட பின்பும் வாட்டம் நிற்குமோ? ஆகையாலே பாதகவஸ்துக்களின்கையிலே அகப்பட்டு நான் நலிவுபடாதே இவையெல்லாம் எனக்கு அநுகூலங்களாகப் பெறும் தேச விஷேயத்திலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்றாளாயிற்று.
;இமில்; எனினும் ;திமில்; எனினும் மாட்டின் முசுப்பு. ஆயன் தீங்குழலோசை = ஸாதாரணமான இடையார் ஊதும் புல்லாங்குழலோசையும் கோபாலக்ருஷ்ணனுடைய குழலோசையை நினைப்பூட்டி வருத்துமென்க. தீம்-இனிமை. கொண்டதோர் மாலை = ;இன்று இவளை முடித்தே விடுவது, என்னுங்கோட்பாடுடைய மாலைப்பொழுது,
English Translation
The sound of the strong humped bull;s bell, the sweet sounds of the cowherd;s flute, the evening, the breeze, the tender crescent Moon of twilight, -no more the ones of the past, -all have joined hands to kill my soul softly, alas! Carry me now to kurungudi, the abode of the Lord of gem hue and cloud hue
