(1783)
சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்
அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால்
செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே.
பதவுரை
|
சுழன்று இலங்கு வெம் கதிரோன் |
– |
(மேருமலையைச்) சுற்றி வந்துகொண்டு பிரகாசிக்கின்ற ஸூரியன் |
|
தேரோடும் போய் மறைந்தான் |
– |
தனது தேரோடே சென்று அஸ்தமித்தான்; |
|
அம்சுடரோன் தான் |
– |
அழகிய கிரணங்களையுடைய சந்திரனோ வென்றால் |
|
அழன்று கொடிது ஆகி |
– |
மிகவும் தீக்ஷ்ணனாய்க் கொண்டு |
|
அடும் |
– |
தஹிக்கின்றான், |
|
ஆல் |
– |
அந்தோ! |
|
செழு |
– |
செழுமைதங்கிய |
|
தடம் |
– |
தடங்களாலும் |
|
பூ சோலை |
– |
பூஞ்சோலைகளாலும் |
|
சூழ் |
– |
சூழப்பட்ட |
|
புல்லாணி |
– |
திருப்புல்லாணியை |
|
கைதொழுதேன் |
– |
கைதொழுத யான் |
|
என்தன் எழில்நிற மும் |
– |
எனது அழகிய நிறத்தையும் |
|
சங்கும் |
– |
வளைகளையும் |
|
இழந்திருந்தேன் |
– |
இழந்து விட்டேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகப் பொருள்களில் எதையேனும் கண்டுகொண்டாகிலும் இந்தப் பிரிவாற்றாமையை ஒருவாறு ஆற்றுவோமென்று பார்த்தால் ஆதித்தன் அஸ்தமித்தான்; சந்திரன் நெருப்புப்போலே எரிப்பவனாகி என்னையே முடித்திடாநின்றான்; திருப்புல்லாணியைத் தொழ ஆசைப்பட்டு நல்ல பலன் பெற்றேனந்தேர்மேனி நிறமும் போயிற்று, கைவளைகளுங் கழன்றொழிந்தன; இங்ஙனம் பரிதாபப்படுவதே நமக்குப் பணியாயிற்றே யென வருந்துகிறாள்.
இரண்டாமடியில் ;அஞ்சுடரில்; என்ற பாடத்துக்கு, ;அம்சுடர்இல்; என்று பிரித்து, அழகிய சுடருக்கு இருப்பிடமான சந்திரன் என்று உரைத்துக்கொள்க, தான் ஆடும் ஆல் = ஸூர்யன் தான் முடிந்துபோனான்; சந்திரன் முடியாதே என்னைமுடிக்கப் பார்க்கிறான் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி.
(இழந்திருந்தேனித்யாதி) ;பிரானோடே புணர்ந்து இன்னமும் மேனிநிறம் வளங்கொள்ளப் பெறவேணும், இன்னமும் ஆபரணங்கள் அணியப்பெறவேணும்; என்று ஆசைப்பட்டு ஏற்கனவே உள்ளவற்றையுமிழந்தேனே; வட்டிக்கு ஆசைப்பட்டு முதலையுமிழப்பாரைப் போலே என்கதியாயிற்றே; என்கிறாள்போதும்.
English Translation
The bright circum-ambulating radiant sun has alighted from his chariot and disappeared. The beautiful Moon sends crue! rays that burn my soul. Alas, I joined my hands in worship of the Lord of Pullani surrounded by beautiful lakes and groves. My bangles and my rouge are lost to me forever
