(1781)
பரிய இரணியன் தாகம் அணியுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு
பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்
அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே.
பதவுரை
|
பரிய |
– |
பருத்த |
|
இரணியானது |
– |
இரணியாசுரனுடைய |
|
ஆகம் |
– |
மார்பை |
|
அரி உரு ஆய் |
– |
நரஸிம்ஹ ரூபியாய் |
|
அணி உகிரால் |
– |
அழகிய நகங்களாலே |
|
கீண்டான் |
– |
கிழித்தொழித்த பெருமான் நம்விஷயத்திலே |
|
அருள் தந்த ஆ |
– |
கிருபைபண்ணின விதம் என்னே!; |
|
பொரு திரைகள் |
– |
ஒன்றின்மேலொன்றாக ஏறித் துவருகிற அலைகள் |
|
போந்து உலவு |
– |
கிட்டவந்து உலாவப் பெற்ற |
|
புல்லாணி |
– |
திருப்புல்லாணியை |
|
கைதொழுதேன் |
– |
தொழுதவளான என்னுடைய |
|
அரி மலர்கண் |
– |
வண்டுபடிந்த பூப்போன்ற கண்களின்று |
|
நீர்ததும்ப |
– |
நீர்தளும்ப |
|
அம் துகிலும் |
– |
அழகிய வஸ்த்ரமும் |
|
நில்லா |
– |
அரையில் தங்குகின்றதில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று ஆசைப்பட்டு அழகாகப் பேறுபெற்றேனென்பது மூன்றாமடியின் கருத்து.
“அரிமலர்க் கண்ணீர் ததும்ப” என்பதற்கு விநோதமானதொரு அர்த்தமருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை;- “கடலும் திரையுங்கண்டு கூட அநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டோம்; இதுவாகில் இவளுக்குத் தேடிப்போக வேணுமோ என்று என்னுடம்பிலே கண்ணநீரையுமுண்டாம்படி பண்ணினான்” என்பது வியாக்கியானம்; – பொருதிரைகள் போந்துலவு புல்லாணியை நான் ஆசைப்பட்டேனாதலால் நீரிலே அவளுக்கு மிக ஆசைபோலும் என்று நினைத்து, அதை நான் தேடியோட வேண்டாமல் உடம்பெல்லாம் கண்ணீர் சோரும்படி செய்துவிட்டாரென்கை.
அம்துகிலும்நில்லா = விரஹவ்யஸநத்தாலே உடல் இளைத்துப் போகவே துகில் தரிப்பற்ற தாயிற்று.
English Translation
I joined my hands to worship the Lord in Pullani where waves come beating against the shore. This is how he graces us, -he who came as a man-lion and tore into the chest of Hiranya with his beautiful nails. My beautiful flower-like eyes do not stop raining tears, my dress does not stay on my person
