(1781)

(1781)

பரிய இரணியன் தாகம் அணியுகிரால்

அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு

பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்

அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே.

 

பதவுரை

பரிய

பருத்த

இரணியானது

இரணியாசுரனுடைய

ஆகம்

மார்பை

அரி உரு ஆய்

நரஸிம்ஹ ரூபியாய்

அணி உகிரால்

அழகிய நகங்களாலே

கீண்டான்

கிழித்தொழித்த பெருமான் நம்விஷயத்திலே

அருள் தந்த ஆ

கிருபைபண்ணின விதம் என்னே!;

பொரு திரைகள்

ஒன்றின்மேலொன்றாக ஏறித் துவருகிற அலைகள்

போந்து உலவு

கிட்டவந்து உலாவப் பெற்ற

புல்லாணி

திருப்புல்லாணியை

கைதொழுதேன்

தொழுதவளான என்னுடைய

அரி மலர்கண்

வண்டுபடிந்த பூப்போன்ற கண்களின்று

நீர்ததும்ப

நீர்தளும்ப

அம் துகிலும்

அழகிய வஸ்த்ரமும்

நில்லா

அரையில் தங்குகின்றதில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று ஆசைப்பட்டு அழகாகப் பேறுபெற்றேனென்பது மூன்றாமடியின் கருத்து.

“அரிமலர்க் கண்ணீர் ததும்ப” என்பதற்கு விநோதமானதொரு அர்த்தமருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை;- “கடலும் திரையுங்கண்டு கூட அநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டோம்; இதுவாகில் இவளுக்குத் தேடிப்போக வேணுமோ என்று என்னுடம்பிலே கண்ணநீரையுமுண்டாம்படி பண்ணினான்” என்பது வியாக்கியானம்; – பொருதிரைகள் போந்துலவு புல்லாணியை நான் ஆசைப்பட்டேனாதலால் நீரிலே அவளுக்கு மிக ஆசைபோலும் என்று நினைத்து, அதை நான் தேடியோட வேண்டாமல் உடம்பெல்லாம் கண்ணீர் சோரும்படி செய்துவிட்டாரென்கை.

அம்துகிலும்நில்லா = விரஹவ்யஸநத்தாலே உடல் இளைத்துப் போகவே துகில் தரிப்பற்ற தாயிற்று.

 

English Translation

I joined my hands to worship the Lord in Pullani where waves come beating against the shore.  This is how he graces us, -he who came as a man-lion and tore into the chest of Hiranya with his beautiful nails.  My beautiful flower-like eyes do not stop raining tears, my dress does not stay on my person

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top