(1769)

(1769)

உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு

முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள்,

பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்

பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே.

 

பதவுரை

நெஞ்சே

–

மனமே!

இங்கு இருந்து

–

இங்கேயிருந்துகொண்டு

நினைந்து

–

சீந்தித்து

உருகி

–

உருகுவதனால் என்னபயன்?

(பின்னை என்ன செய்யவேணுமென்கிறாயோ, கேள்;)

வண்டு

–

வண்டுகள்

முருகு உண்

–

தேனுண்ணப் பெற்ற

மலர்

–

பூவையுடைத்தான

கைதையின்

–

தாழையினுடைய

நீழலில்

–

நிழலிலே

முன் ஒருநாள்

–

முன்பொருநாள்

என் உள்ளம்

–

என்னெஞ்சானது

பெருகு காதன்மை எய்த

–

மிக்க ஆவல்கொள்ளும்படி

பிரிந்தான்

–

பிரிந்துபோன பெருமானுடைய

இடம்

–

இருப்பிடமாயும்

முந்நீர்

–

கடவானது

பொருது

–

அலையெறிந்து

கரைக்கே

–

கரையிலே

மணி உந்து

–

ரத்னங்களைக் கொழித்துத் தள்ளுமிடமாயுமுள்ள

புல்லாணி

–

திருப்புல்லாணியை

தொழுதும்

–

சென்றுவணங்குவோம்;

எழு

–

எழுந்திரு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெஞ்சமே! இவ்விடத்திலிருந்து கொண்டு அப்பெருமானைச் சிந்தித்து உருகுவதனால் என்ன பலணுண்டாம்? நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம் முடைய சிந்தனை தீரவேணுமானாலும் இங்கிருப்பதில் பயனில்லை; புல்லாணியே போய்த் தொழவேணுங்காண். அவ்விடத்தில் வண்டு முதலிய திர்யக்ஜந்துக்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழ்கின்றனவாதலால் நாமும் அங்குப்போய் அபிமதம் பெற்றுக் களித்துவாழப் பெறலாமன்றோ என்கிறாள்.

 

English Translation

O Heart! Bow that-a-ways and arise.   What use sifting here and melting? One day in the past, in the shade of the screwpine, teaming with nectar-drunken bees, he filled my heart with love and left.  He resides in Pullani by the sea whose waves wash gems on the shore

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top