(1769)
உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு
முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள்,
பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்
பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே.
பதவுரை
|
நெஞ்சே |
– |
மனமே! |
|
இங்கு இருந்து |
– |
இங்கேயிருந்துகொண்டு |
|
நினைந்து |
– |
சீந்தித்து |
|
உருகி |
– |
உருகுவதனால் என்னபயன்? |
|
(பின்னை என்ன செய்யவேணுமென்கிறாயோ, கேள்;) |
||
|
வண்டு |
– |
வண்டுகள் |
|
முருகு உண் |
– |
தேனுண்ணப் பெற்ற |
|
மலர் |
– |
பூவையுடைத்தான |
|
கைதையின் |
– |
தாழையினுடைய |
|
நீழலில் |
– |
நிழலிலே |
|
முன் ஒருநாள் |
– |
முன்பொருநாள் |
|
என் உள்ளம் |
– |
என்னெஞ்சானது |
|
பெருகு காதன்மை எய்த |
– |
மிக்க ஆவல்கொள்ளும்படி |
|
பிரிந்தான் |
– |
பிரிந்துபோன பெருமானுடைய |
|
இடம் |
– |
இருப்பிடமாயும் |
|
முந்நீர் |
– |
கடவானது |
|
பொருது |
– |
அலையெறிந்து |
|
கரைக்கே |
– |
கரையிலே |
|
மணி உந்து |
– |
ரத்னங்களைக் கொழித்துத் தள்ளுமிடமாயுமுள்ள |
|
புல்லாணி |
– |
திருப்புல்லாணியை |
|
தொழுதும் |
– |
சென்றுவணங்குவோம்; |
|
எழு |
– |
எழுந்திரு |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நெஞ்சமே! இவ்விடத்திலிருந்து கொண்டு அப்பெருமானைச் சிந்தித்து உருகுவதனால் என்ன பலணுண்டாம்? நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம் முடைய சிந்தனை தீரவேணுமானாலும் இங்கிருப்பதில் பயனில்லை; புல்லாணியே போய்த் தொழவேணுங்காண். அவ்விடத்தில் வண்டு முதலிய திர்யக்ஜந்துக்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழ்கின்றனவாதலால் நாமும் அங்குப்போய் அபிமதம் பெற்றுக் களித்துவாழப் பெறலாமன்றோ என்கிறாள்.
English Translation
O Heart! Bow that-a-ways and arise. What use sifting here and melting? One day in the past, in the shade of the screwpine, teaming with nectar-drunken bees, he filled my heart with love and left. He resides in Pullani by the sea whose waves wash gems on the shore
