(1739)

(1739)

பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும்

ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால்

வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்

கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.

 

பதவுரை

கண்ணபுரத்து உறை அம்மானே!- ;

பெரு நீரும்

–

ஸமுத்ரங்களையும்

விண்ணும்

–

ஆகாயத்தையும்

மலையும்

–

மலைகளையும்

உலகு ஏழும்

–

ஏழுலகங்களையும்

ஒரு தார் ஆ

–

ஒருமாலையாக

நின்னுள்

–

தன்னுள்ளே

ஒடுக்கிய

–

(ஒருமூலையில்) அடங்கச் செய்து கொண்ட

நின்னை அல்லால்

–

உன்னைத்தவிர

வரு தேவர் மற்று உளர் என்று

–

(நான் ஆச்ரயணீயன் என்று சொல்லிக்கொண்டு) வரக்கூடிய தேவதைவேறொன்று இருப்பதாக

என் மனத்து

–

என்னெஞ்சிலே

இறையும்

–

சிறிதும்

நான் கருதேன்

–

நான் நினைத்தறியேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “அங்கண்ஞாலமுண்டபோது வெள்ளி வெற்பு அகன்றதோ” என்றபடி கைலாஸ கிரியுமுட்பட எல்லாவற்றையும் பிரளயகாலத்தில் திருவயிற்றில் கொண்டிருந்த உன்னைத் தெய்வமாக நினைப்பேனோ, அன்றி, உன்திருவயிற்றில் ஒடுங்கியிருந்து பின்பு வெளிவந்த எச்சில்களைத் தெய்வமாக நினைப்பேனோ என்கிறார்ப்பாட்டால்.

‘ஒரு தாரா’ என்பதை விளியாகவுங் கொள்ளலாம்; (ஆச்ரிதாக்ஷணத்துக்கு இட்ட) தனிமாலையையுடையவனே! என்றபடி.

 

English Translation

O Lord residing in kannapuram! The ocean, the sky, the mountains, the seven continents, -all within a trice you swallowed and placed within yourself.  My heart does not the slightest dwell upon other gods who appear before me: I seek but you alone!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top