(1739)
பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும்
ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால்
வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்
கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.
பதவுரை
|
கண்ணபுரத்து உறை அம்மானே!- ; |
||
|
பெரு நீரும் |
– |
ஸமுத்ரங்களையும் |
|
விண்ணும் |
– |
ஆகாயத்தையும் |
|
மலையும் |
– |
மலைகளையும் |
|
உலகு ஏழும் |
– |
ஏழுலகங்களையும் |
|
ஒரு தார் ஆ |
– |
ஒருமாலையாக |
|
நின்னுள் |
– |
தன்னுள்ளே |
|
ஒடுக்கிய |
– |
(ஒருமூலையில்) அடங்கச் செய்து கொண்ட |
|
நின்னை அல்லால் |
– |
உன்னைத்தவிர |
|
வரு தேவர் மற்று உளர் என்று |
– |
(நான் ஆச்ரயணீயன் என்று சொல்லிக்கொண்டு) வரக்கூடிய தேவதைவேறொன்று இருப்பதாக |
|
என் மனத்து |
– |
என்னெஞ்சிலே |
|
இறையும் |
– |
சிறிதும் |
|
நான் கருதேன் |
– |
நான் நினைத்தறியேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “அங்கண்ஞாலமுண்டபோது வெள்ளி வெற்பு அகன்றதோ” என்றபடி கைலாஸ கிரியுமுட்பட எல்லாவற்றையும் பிரளயகாலத்தில் திருவயிற்றில் கொண்டிருந்த உன்னைத் தெய்வமாக நினைப்பேனோ, அன்றி, உன்திருவயிற்றில் ஒடுங்கியிருந்து பின்பு வெளிவந்த எச்சில்களைத் தெய்வமாக நினைப்பேனோ என்கிறார்ப்பாட்டால்.
‘ஒரு தாரா’ என்பதை விளியாகவுங் கொள்ளலாம்; (ஆச்ரிதாக்ஷணத்துக்கு இட்ட) தனிமாலையையுடையவனே! என்றபடி.
English Translation
O Lord residing in kannapuram! The ocean, the sky, the mountains, the seven continents, -all within a trice you swallowed and placed within yourself. My heart does not the slightest dwell upon other gods who appear before me: I seek but you alone!
