(1730)

(1730)

விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற

படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,

மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்

றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ?

 

பதவுரை

அன்று

–

முன்பொருகாலத்தில் (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக)

ஏழ்விடை

–

ஏழு ரிஷபங்களை

வெகுண்டு

–

சீறிக்கொண்டு

அடர்த்து

–

வலியடக்கினவனும்,

விலங்கல்

–

த்ரிகூடபர்வதத்தில்

உற

–

சென்று சேரும்படியாக

படையால்

–

(வாநர) ஸேனைகளைக்கொண்டு

ஆழி

–

ஸமுத்ரத்தை

தட்ட

–

அடைத்தவனும்,

பரமன்

–

எல்லாரினுஞ் சிறந்தவனும்

பரம் சோதி

–

சிறந்த தேஜஸ்ஸ்வரூபியும்

மடை ஆர்

–

மடைகளெங்கும் நிரம்பிய

நீலம்

–

நீலோற்பல மலர்கள்

மல்கும்

–

வியாபித்திருக்கப் பெற்ற

வயல்

–

கழனிகளாலே

சூழ்

–

சூழப்பட்ட

கண்ணபுரம் ஒன்று

–

திருக்கண்ணபுரமென்கிற ஒரு விலக்ஷண திவ்யதேசத்தை

உடையானுக்கு

–

(இருப்பிடமாக) உடைய பெருமானுக்கு

அடியேன்

–

சேஷபூதனான நான்

ஒருவர்க்கு

–

வேறுசிலர்க்கு

உரியேனோ

–

உரிமைப்படுவேனோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விலங்கலுறப் படையாலாழிதட்ட பரமன் = ஆழி விலங்கலுறப் படையால் தட்ட பரமன் என்றும் அந்வயித்து உரைப்பார்.  ஆழி ஸ்ரீ ஸூர்யனானவன், விலங்கல் உற – (அஸ்தமன) பர்வதத்தில் சேர்ந்து விட்டானென்னும்படி, படையால் – சக்கரப்படையினால், தட்ட – மறைத்த – என்று பொருள் காண்க.

 

English Translation

Then in the yore the Lord killed seven angry bulls.  He gathered a monkey army and mode a bridge over the ocean strait.  He is a body of effulgence.  He is the resident of kannapuram with fertile fields and water tanks filled with blue lotus.  Having become his devotee, will bow to anyone else?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top