(1730)
விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,
மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்
றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ?
பதவுரை
|
அன்று |
– |
முன்பொருகாலத்தில் (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக) |
|
ஏழ்விடை |
– |
ஏழு ரிஷபங்களை |
|
வெகுண்டு |
– |
சீறிக்கொண்டு |
|
அடர்த்து |
– |
வலியடக்கினவனும், |
|
விலங்கல் |
– |
த்ரிகூடபர்வதத்தில் |
|
உற |
– |
சென்று சேரும்படியாக |
|
படையால் |
– |
(வாநர) ஸேனைகளைக்கொண்டு |
|
ஆழி |
– |
ஸமுத்ரத்தை |
|
தட்ட |
– |
அடைத்தவனும், |
|
பரமன் |
– |
எல்லாரினுஞ் சிறந்தவனும் |
|
பரம் சோதி |
– |
சிறந்த தேஜஸ்ஸ்வரூபியும் |
|
மடை ஆர் |
– |
மடைகளெங்கும் நிரம்பிய |
|
நீலம் |
– |
நீலோற்பல மலர்கள் |
|
மல்கும் |
– |
வியாபித்திருக்கப் பெற்ற |
|
வயல் |
– |
கழனிகளாலே |
|
சூழ் |
– |
சூழப்பட்ட |
|
கண்ணபுரம் ஒன்று |
– |
திருக்கண்ணபுரமென்கிற ஒரு விலக்ஷண திவ்யதேசத்தை |
|
உடையானுக்கு |
– |
(இருப்பிடமாக) உடைய பெருமானுக்கு |
|
அடியேன் |
– |
சேஷபூதனான நான் |
|
ஒருவர்க்கு |
– |
வேறுசிலர்க்கு |
|
உரியேனோ |
– |
உரிமைப்படுவேனோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- விலங்கலுறப் படையாலாழிதட்ட பரமன் = ஆழி விலங்கலுறப் படையால் தட்ட பரமன் என்றும் அந்வயித்து உரைப்பார். ஆழி ஸ்ரீ ஸூர்யனானவன், விலங்கல் உற – (அஸ்தமன) பர்வதத்தில் சேர்ந்து விட்டானென்னும்படி, படையால் – சக்கரப்படையினால், தட்ட – மறைத்த – என்று பொருள் காண்க.
English Translation
Then in the yore the Lord killed seven angry bulls. He gathered a monkey army and mode a bridge over the ocean strait. He is a body of effulgence. He is the resident of kannapuram with fertile fields and water tanks filled with blue lotus. Having become his devotee, will bow to anyone else?
