(1723)
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால்,
படியார் அரசு களைகட்ட பாழி யானை யம்மானை,
குடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,
கடியார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
பதவுரை
| வடி வாய் |
– |
கூர்மை பொருந்திய வாயையுடைய |
| மழுவே |
– |
கோடாலியையே |
| படை ஆக |
– |
ஆயுதமாகக் கொண்டு |
| வந்து தோன்றி |
– |
(பரசுராமனாய்த்) திருவவதரித்து |
| மூ எழுகால் |
– |
இருபத்தொரு தலைமுறையளவும் |
| படி |
– |
பூமியில் |
| ஆர் |
– |
நிறைந்திருக்கிற |
| அரசு |
– |
க்ஷத்ரியர்களாகிற |
| களை |
– |
விரோதிகளை |
| கட்ட |
– |
தொலைத்த |
| பாழியானை |
– |
மிடுக்குடையனான |
| அம்மானை |
– |
எம்பெருமானை,- |
| வண்டு |
– |
வண்டுகளானவை |
| குடி ஆ |
– |
குடும்பமாக |
| கொண்டு உண்ண |
– |
(மதுவை) எடுத்துப் பருகும்படியாக |
| கோலம் நீலம் |
– |
அழகிய நீலோற்பல மலர்கள் |
| மட்டு |
– |
மதுவை |
| உகுக்கும் |
– |
பெருகச்செய்யப் பெற்ற |
| கடி ஆர் புறவின் |
– |
பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய |
| கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்தில் |
|
அடியேன் கண்டுகொண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- க்ஷேத்ரத்தின் போக்கியதை பின்னடிகளிற் கூறப்பட்டது. மூன்றாமடிக்கு இருவகையாகப் பொருள்கூறலாம்; வண்டுகள் உண்ணுமாறு மலர்கள் மதுவைப் பெருக்குகின்றனவாக உரைத்தல் ஒன்று. வண்டுகள் மதுவை யதேஷ்டமாக உண்டபின்னும் மலர்கள் மதுவை மேன்மேலும் பெருக்கிக் கொண்டே யிருக்கின்றனவாக உரைத்தல் மற்றொன்று. இரண்டாவது நிர்வாஹமே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம் பற்றியது. “கடலிலே ஒரு சிறாங்கையைப் புஜிக்குங் காட்டில் கடல்வற்றாதிறே” என்ற ஸ்ரீஸூக்திகாண்க.
English Translation
The all-powerful Lord appeared wielding a sharp battleaxe on Earth and killed twenty one rulling kings. I know he is in kannapuram, where bumble-bees swarn over blue lotus flowers that swell with nectar in fragrant water tanks.
