(1692)
ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த
ஆழி யான்,நமக் கருளிய அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்,
தோழி நாமிதற் கென்செய்தும் துணையில்லை சுடர்படு முதுநீரில்,
ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர் அந்திவந் தடைகின்றதே.
பதவுரை
|
ஏழு மா மரம் |
– |
ஸப்தஸால வ்ருக்ஷங்கள் |
|
துளைபட |
– |
(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காகத்) துளைபடும்படி |
|
சிலை |
– |
வில்லை |
|
வளைத்து |
– |
வளைத்தவனும், |
|
இலங்கையை |
– |
லங்காபுரியை |
|
மலங்குவித்த |
– |
கலங்கப்பண்ணினவனுமான |
|
ஆழியான் |
– |
அறுகாழி மோதிரத்தைக் கை யிலேயுடைய இராமபிரான் |
|
நமக்கு அருளிய அருளொடும் |
– |
நம் விஷயத்திற் பண்ணின கிருபையோடுகூட |
|
பகல் எல்லை கழிகின்றது |
– |
பகற்போதும் முடிந்து போகாநின்றது; |
|
ஆல் |
– |
அந்தோ! ; |
|
தோழி |
– |
வாராய் தோழீ! ; |
|
இதற்கு நாம் என் செய்தும் |
– |
இந்த ஆபத்துக்கு நாம் என்ன பரிஹாரம் செய்யவல்லோம்! ; |
|
துணை இல்லை |
– |
துணைநிற்பார் ஆருமில்லை; |
|
சுடர் |
– |
ஸூரியனானவன் |
|
படு |
– |
தான் தோன்றின |
|
முது நீரில் |
– |
ஸமுத்ரத்தினுள் |
|
ஆழ |
– |
ஆழ்ந்து மறைந்துபோக, |
|
வாழ்கின்ற ஆவியை அடுவது |
– |
பிழைத்திருக்க நினைத்திருக்கின்ற பிராணனை முடிப்பதான |
|
ஓர் அந்தி |
– |
ஒரு ஸாயம்ஸந்த்யாகாலமானது |
|
வந்து அடை கின்றதே |
– |
வந்து சேர்கின்றதே!. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அன்பர்கட்கு அருந்தொழில்கள் செய்யுமவன் என்று புகழ்பெற்ற பெருமான் இதுவரையில் நமக்குச் செய்திருந்த அருளும் போயிற்று, பகற்பொழுதும் போயிற்று; எம்பெருமானருள் மறுத்தாலும் பகற்பொழுதாகிலுமிருந்தால் ஒருவாறு உலகப்பொருள்களையாவது கண்டுகொண்டு ஆற்றலாம்; அவனருளோடு கூடவே பகற்போதும் போயிற்றே; தோழீ! இதற்கு நாம் என் செய்யக்கடவோம்; நமக்கு ஆரும் துணையில்லையே; ஸூர்யன் தான் தோன்றின ஸமுத்ரத்திலேயே சென்று அஸ்தமிக்க, இன்னம் சிறிது நாளைக்கு ஜீவித்திருக்கவல்ல பிராணனை இன்றே முடிப்பதாக மாலைப்பொழுது வந்து சேர்ந்து விட்டதே! அந்தோ! என்கிறாள்.
English Translation
The discus wielder pierced seven frees and rozed Lanka; this is the grace that he has showered on us, Sister! The day draws to a close, alas, what can we do? We have no help. The sun is sinking into the sea, a deadly eventide comes to kill our flickering souls, alas!
