(1692)

(1692)

ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த

ஆழி யான்,நமக் கருளிய அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்,

தோழி நாமிதற் கென்செய்தும் துணையில்லை சுடர்படு முதுநீரில்,

ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர் அந்திவந் தடைகின்றதே.

 

பதவுரை

ஏழு மா மரம்

ஸப்தஸால வ்ருக்ஷங்கள்

துளைபட

(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காகத்) துளைபடும்படி

சிலை

வில்லை

வளைத்து

வளைத்தவனும்,

இலங்கையை

லங்காபுரியை

மலங்குவித்த

கலங்கப்பண்ணினவனுமான

ஆழியான்

அறுகாழி மோதிரத்தைக் கை யிலேயுடைய இராமபிரான்

நமக்கு அருளிய அருளொடும்

நம் விஷயத்திற் பண்ணின கிருபையோடுகூட

பகல் எல்லை கழிகின்றது

பகற்போதும் முடிந்து போகாநின்றது;

ஆல்

அந்தோ! ;

தோழி

வாராய் தோழீ! ;

இதற்கு நாம் என் செய்தும்

இந்த ஆபத்துக்கு நாம் என்ன பரிஹாரம் செய்யவல்லோம்! ;

துணை இல்லை

துணைநிற்பார் ஆருமில்லை;

சுடர்

ஸூரியனானவன்

படு

தான் தோன்றின

முது நீரில்

ஸமுத்ரத்தினுள்

ஆழ

ஆழ்ந்து மறைந்துபோக,

வாழ்கின்ற ஆவியை அடுவது

பிழைத்திருக்க நினைத்திருக்கின்ற பிராணனை முடிப்பதான

ஓர் அந்தி

ஒரு ஸாயம்ஸந்த்யாகாலமானது

வந்து அடை கின்றதே

வந்து சேர்கின்றதே!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அன்பர்கட்கு அருந்தொழில்கள் செய்யுமவன் என்று புகழ்பெற்ற பெருமான் இதுவரையில் நமக்குச் செய்திருந்த அருளும் போயிற்று, பகற்பொழுதும் போயிற்று;  எம்பெருமானருள் மறுத்தாலும் பகற்பொழுதாகிலுமிருந்தால் ஒருவாறு உலகப்பொருள்களையாவது கண்டுகொண்டு ஆற்றலாம்; அவனருளோடு கூடவே பகற்போதும் போயிற்றே; தோழீ! இதற்கு நாம் என் செய்யக்கடவோம்; நமக்கு ஆரும் துணையில்லையே; ஸூர்யன் தான் தோன்றின ஸமுத்ரத்திலேயே சென்று அஸ்தமிக்க, இன்னம் சிறிது நாளைக்கு ஜீவித்திருக்கவல்ல பிராணனை இன்றே முடிப்பதாக மாலைப்பொழுது வந்து சேர்ந்து விட்டதே! அந்தோ! என்கிறாள்.

 

English Translation

The discus wielder pierced seven frees and rozed Lanka; this is the grace that he has showered on us, Sister!  The day draws to a close, alas, what can we do?  We have no help.  The sun is sinking into the sea, a deadly eventide comes to kill our flickering souls, alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top