(1687)
வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,
கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,
கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ.
பதவுரை
|
கோல் தும்பீ!- |
||
|
வண்டு அமரும் சோலை |
– |
வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும் |
|
வயல் |
– |
கழனிகளை யுடையதுமான |
|
ஆலி |
– |
திருவாலி யென்கிற |
|
நல் நாடன் |
– |
நல்ல நாட்டுக்குத் தலைவரும் |
|
கண்ட சீர் |
– |
பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும் |
|
வென்றி |
– |
ஜயசீலருமான |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த |
|
மாலை |
– |
இச்சொல் மாலையைக் கொண்டு, |
|
கொண்டல் நிறம் வண்ணன் |
– |
மேகத்தின் நிறம்போன்ற நிறத்தையுடையனான |
|
கண்ண புரத்தானை |
– |
திருக்கண்ணபுரத் தெம்பெருமானை |
|
தொண்டரோம் |
– |
அடியோங்கள் |
|
பாட |
– |
பாடும்படியாக |
|
நினைந்து |
– |
நீ நெஞ்சிற்கொண்டு |
|
ஊதாய் |
– |
ஊதவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நிகமநப் பாசுரங்களில் “பூவளருங் கற்பகஞ்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ் தக்கோரே” “நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே” “நாமருவியிவைபாட வினையாய நண்ணாவே” என்று பயனுரைப்பதுபோல இப்பதிகத்திற்குப் பயனுரைக்கப் படவில்லை; தொண்டர் கட்கு இத்திருமொழியைப் பாடுதல் ஸ்வயம் ப்ரயோஜநமென்று காட்டப்பட்ட தாயிற்று.
“தொண்டர்கள் பாட” என்று படர்க்கையாகச் சொல்ல வேண்டுமிடத்துத் ‘தொண்டரோம்’ என்று தன்மையாகச் சொல்லியிருந்தாலும் படர்க்கையில் நோக்காகக் குறையில்லை. ஈற்றடியின் உட்கருத்து யாதெனில்; ஆழ்வார் தாம் குறைதீரப் பெற்றால் தொண்டர்களெல்லாரும் தம் குறைதீரப் பெற்றதாக நினைப்பர்களாதலால் அந்த மகிழ்ச்சியினால் இத் திருமொழியை உவந்து பாடுவர்கள்; அப்படி செய்விக்க வேணுமென்று தும்பிபோல்வாரான பாகவதர்களை வேண்டுகிறபடி.
English Translation
O Dragon-fly! The victorious kaliyan, king of the bee-humming fertile groves-and-fields Vayalali has sung this garland of sweet Tamil songs for the cloud-hued Lord of Tiukkannapuram. That we devotees may sing it, grace us with the fragrance of his Tulasi wreath.
