(1687)

(1687)

வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,

கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,

கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,

தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ.

 

பதவுரை

கோல் தும்பீ!-

வண்டு அமரும் சோலை

வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும்

வயல்

கழனிகளை யுடையதுமான

ஆலி

திருவாலி யென்கிற

நல் நாடன்

நல்ல நாட்டுக்குத் தலைவரும்

கண்ட சீர்

பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும்

வென்றி

ஜயசீலருமான

கலியன்

திருமங்கையாழ்வார்

ஒலி

அருளிச்செய்த

மாலை

இச்சொல் மாலையைக் கொண்டு,

கொண்டல் நிறம் வண்ணன்

மேகத்தின் நிறம்போன்ற நிறத்தையுடையனான

கண்ண புரத்தானை

திருக்கண்ணபுரத் தெம்பெருமானை

தொண்டரோம்

அடியோங்கள்

பாட

பாடும்படியாக

நினைந்து

நீ நெஞ்சிற்கொண்டு

ஊதாய்

ஊதவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நிகமநப் பாசுரங்களில் “பூவளருங் கற்பகஞ்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ் தக்கோரே” “நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே”  “நாமருவியிவைபாட வினையாய நண்ணாவே” என்று பயனுரைப்பதுபோல இப்பதிகத்திற்குப் பயனுரைக்கப் படவில்லை; தொண்டர் கட்கு இத்திருமொழியைப் பாடுதல் ஸ்வயம் ப்ரயோஜநமென்று காட்டப்பட்ட தாயிற்று.

“தொண்டர்கள் பாட” என்று படர்க்கையாகச் சொல்ல வேண்டுமிடத்துத் ‘தொண்டரோம்’ என்று தன்மையாகச் சொல்லியிருந்தாலும் படர்க்கையில் நோக்காகக் குறையில்லை.  ஈற்றடியின் உட்கருத்து யாதெனில்; ஆழ்வார் தாம் குறைதீரப் பெற்றால் தொண்டர்களெல்லாரும் தம் குறைதீரப் பெற்றதாக நினைப்பர்களாதலால் அந்த மகிழ்ச்சியினால் இத் திருமொழியை உவந்து பாடுவர்கள்; அப்படி செய்விக்க வேணுமென்று தும்பிபோல்வாரான பாகவதர்களை வேண்டுகிறபடி.

 

English Translation

O Dragon-fly!  The victorious kaliyan, king of the bee-humming fertile groves-and-fields Vayalali has sung this garland of sweet Tamil songs for the cloud-hued Lord of Tiukkannapuram. That we devotees may sing it, grace us with the fragrance of his Tulasi wreath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top