(1679)

(1679)

வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,

பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,

காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,

தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.

 

பதவுரை

வேதம் முதல் வன்

வேதங்களால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்

விளங்கு

(திருமேனியில்) விளங்குகின்ற

புரி நூலன்

யஜ்ஞோபவீதத்தையுடையவனும்

பலரும்

எல்லாரும்

பாதம்

திருவடிகளை

பரவி பணிந்து ஏத்தி

ஆச்ரயித்து வணங்கித் துதித்து

காதன்மை செய்யும்

பக்தி பண்ணுதற்கு உரியனான

கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-

தாது

தாதுகளையுடைத்தாய்

நறு

மணம்மிக்கதான

துழாய்

திருத்துழாயிலே

தாழ்ந்து

படிந்து

(அந்த நறுமணத்தைக் கொணர்ந்து)-

ஊதாய் கோல் தும்பீ!-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடத்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந்துழாய் கொண்டு என்னெறி மென்குழல்மேல் சூட்டீரே” என்று அவனுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து தன் தலையில் சூட்ட வேணுமென்று அபேக்ஷித்தாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி; இப்பரகால நாயகி அங்ஙனன்றிக்கே துழாயிற்படிந்து வந்து ஊதினாற்போது மென்கிறாள்.

 

English Translation

O Dragon-fly! Go now to my Lord of Tirukkannapuram,-He is first-cause Lord of the Vedas, he wears the Vedic thread, the world praises his feet, offering worship, filled with love, -come back and blow over me the pollen from his Tulasi wreath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top