(1675)

(1675)

கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்

செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,

வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா,

செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே.

 

பதவுரை

தெண் கயங்கள்

தெளிந்த தடாகங்களானவை

கொங்கு மலி

பரிமளம் மிக்க

கரு குவளை

கரு நெய்தற்பூக்களை

கண் ஆக

கண்களாகவும்

செம் கமலம்

செந்தாமரைப் பூக்களை

முகம்

முகங்களாகவும்

மலர்த்தும்

விகஸிப்பிக்கப்பெற்ற

திருக்கண்ணபுரத்து, உறையும்-;

வங்கம் மலி தட கடலுள்

அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலிலே

வரி

கோடுகளையுடைய

அரவு

திருவனந்தாழ்வானாகிற

இன்

இனிமையான

அணை

திருப்பள்ளி மெத்தையிலே

துயின்ற

சயனித்தருளாநின்ற

செம் கமலம் நாபனுக்கு

செந்தாமரைப்பூவைத் திருநாபியிலே உடையனான பெருமானுக்கு

என் செறி வளை இழந்தேன்-.

 

English Translation

Tirukkannapuram has clear lakes in which the fragrant blue water lily likens the eyes and red lotus likens the face of the Lord.  He is the Lord who reclines in the deep ocean on a frackled serpent, with a red lotus growing from his navel.  Alas, I have lost my beautiful golden bangles to him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top