(1647)

(1647)

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன்என்று  காத லால்கலி கன்றியு ரைசெய்த,

வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்

விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர் மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய

கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில் கற்க லாம்கவி யின்பொருள் தானே.

 

பதவுரை

கலிகன்றி

திருமங்கையாழ்வார்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று

‘திருக்கண்ணமங்கையில் (எம்பெருமானை) ஸேவிக்கப்பெற்றேன்’ என்று

காதலால் உரை செய்த

அன்புடனருளிச் செய்த

வண்ணம் ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை

இசையையுடைத்தாய் அழகியதான இத்தமிழ்ப் பாசுரங்ள் பத்தையும்

வல்லர் ஆய் உரைப்பார்

நிபுணராய்ச் சொல்லுமவர்கள்

மதியம் தவழ் விண்ணில்

சந்தியன் தவழப்பெற்ற மேலுலகங்களில்  (சென்று)

விண்ணவர் ஆய்

தேவர்களாய்

மகிழ்வு எய்துவர்

(போகங்களையநுபவித்து) ஆநந்த மடைவர்கள்;

மெய்ம்மை சொல்லில்

உண்மையாகச் சொல்லப் புகுந்தால்,

வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண

வெண்ணிறமாய் விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தைத் தரித்துள்ள பெருமானே!

குறிப்பு ஆகில்

திருவுள்ளமாயின்

கவியின் பொருள்

இப்பாசுரங்களின் பொருள்

நின் தனக்கும் கற்கலாம்

(ஸர்வஜ்ஞனான) உனக்கும் கேட்டுணரத்தக்கதாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நலமந்த மில்லதோர் நாடாகிய திருநாட்டிற் சென்று காணவேண்டிய பரமபுருஷனை இந்நிலத்தில் தானே திருக்கண்ணமங்கையில் காணப்பெற்றேனென்று அபிநிவேசத்தோடே ஆழ்வாரருளிச் செய்த இத்திருமொழியை நன்கு ஓதியுணருமவர்கள் விண்ணுலகத்தில் தேவர்களாய் விளங்கி மகிழ்வர்கள் என்று பயனரைத்து, அவ்வளவோடே தலைக்கட்ட மாட்டாமல் எம்பெருமானை நோக்கி ஒரு வார்த்தை யருளிச் செய்கிறார் ஈற்றடியில்; எம்பெருமானே! உனக்கும் இதிலே ஆதரமுண்டாகில் எனக்கு சிஷ்யனாயிருந்து கற்றவேண்டுங்காண் என்கிறார்.  இத்திருமொழியின் இனிமையைக் கண்டவாறே எம்பெருமான்றானும் “கலயாமி கலித்வம்ஸம்” என்று தனியன் தொடங்கி அநுஸந்தித்து அதிகரிக்கப் புகுவன் என்று காட்டினவாறு.  அவ்வளவு சீரிய பொருள் குடிகொண்டதாம் இத்திருமொழி.  சொல்லின்பமும் பொருளின்பமும் எம்பெருமானையும் வணங்கப்பண்ணு மென்க.

“ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனென்று இறுமாந்திருந்தால் போகாது; என்பாடே அதிகரிக்கில் அறியலாம்” என்றும், “ஒரு வஸிஷ்டன்பாடே ஸாந்தீபிநிபாடே தாழநின்று அதிகரிக்கக் கடவ அவனக்குத் திருமங்கையாழ்வார்பாடே.  அதிகரிக்கை தாழ்வோ?” என்றுமுள்ள வியாக்கியாள ஸ்ரீஸூக்திகள் இங்கு அறியத்தக்கன. ராமாவதாரத்தில் வஸிஷ்ட சிஷ்யனென்றும், க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபிநி சிஷ்யனென்றும் பேர் பெற்ற பெருமானுக்கு அர்ச்சரவதாரத்தில் பரகால சிஷ்யனென்று பெயர் பெறுகை பெருமையே யாமென்கை.

ஈற்றடியில் ‘நீ கற்கலாம்’ என்றும் பாடமுண்டு.

 

English Translation

“I sought and found him in Kannamganai”- this garland of sweet Tamil songs by Kalikanri is field with love.  Those who master it will live with the celestials in the wide sky.  In fact, O krishna with a conch in hand, even you will benefit from learning these sons.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top