(1533)

(1533)

பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்

மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்

மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில்

மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே.

 

பதவுரை

மின்ன

(மேற்கே) மின்னல் கண்டவாறே

பொன்

பொன்களையும்

முத்தும்

முத்துக்களையும்

அரி உகிரும்

சிங்கங்களின் நகங்களையும்

புழை கைமா கரி கோடும்

த்வாரத்தையுடைய துதிக்கையையுடைத்தான பெரிய யானைகளின் கொம்புகளையும்

தண் திரை உந்தும்

குளிர்ந்த அலைகளின் முகமாகக் கொழிக்கின்ற

வியன் பொன்னி, திருநறையூர்-;

மின் ஒத்த நுண்

மின்னல் போன்று அதிஸூக்ஷ்மமான

மருங்குல்

இடையையுடையளாய்

மெல் இயலை

ஸௌகுமார்யத்தை ஸ்வபாவமாக உடையளான பிராட்டியை

திருமார்பில்

திருமார்பிலே

மன்ன

பொருந்தும்படியாக

தான் வைத்து உகந்தான்

தரித்துக்கொண்டு திருவுள்ளமுவந்திருக்கிற பெருமானுடைய

மலர் அடியே

திருவடித்தாமரைகளையே

நெஞ்சே! அடை-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிங்கங்கள் யானைகளோடே பொருது அவற்றின் கும்பஸ்தலங்களைக் கிழித்து உதிர்த்தமுத்துக்களையும் மலைகளிலுண்டான பொன்களையும் சிங்கநகங்களையும் யானைக்கொம்புகளையும் நீர்வாக்காலே கொணர்ந்துதள்ளிப் பெருகுகின்ற பொன்னியாறு பாயப்பெற்ற திருநறையூரில் *அகலகில்லேனிறையுமென் றலர்மேல் மங்கையுறைமார்பன் வாழ்கின்றான்; அன்னவனுடைய பொன்னடியே அடைநெஞ்சே.

 

English Translation

O Heart!  Gold, pearls, tiger’s claws, ivory, all these are brought as gifts by the river karaveri in Tirunaralyur; the lord is pleased to keep his sweet companion, the lady Sri of lightning-thin waist, on his chest, Attain his flower-adored feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top