(1534)

(1534)

சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்

பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்

கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்

தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே.

 

பதவுரை

சீர்தழைத்த கதிர்

அழகுமிக்க கதிர்களையுடைய

செந்நெல்

செந்நெற்பயிர்களினுடையவும்

(அவற்றையடுத்து முளைத்த)

செங்கமலம்

செந்தாமரைகளினுடையவும்

இடை இடையில்

நடு நடுவே

கரும்பு

கரும்புகளானவை

ஓங்கி பார் தழைத்து

உயரவெழுந்து தரையிலே படியவளர்ந்து

பயன் விளைக்கும்

பலன்களைக் கொடுக்கப்பெற்ற

திரு நறையூர்-;

கார் தழைத்த திரு உருவன்

காளமேகப்போன்ற திருமேனியை யுடையவனும்

விண்ணவர் கோன்

தேவாதி தேவன்

தார் தழைத்த துழாய் முடியன்

பூக்கள் நிறைந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனுமான

கண்ணபிரான்

கண்ணபிரானுடைய

தளிர் அடியே

தளிர்போன்ற திருவடிகளையே

நெஞ்சே! அடை -.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கரும்புவிளையும் நிலதிலே கருப்பங்கட்டைகளை வெட்டிவிட்டுச் செந்நெலை நடுவர்கள்; செந்நெலுக்குக் களையாக இடையிலே தாமரை விளையும்; முன்பு வெட்டிப் போட்ட கருப்பங்கட்டைகளும் பழைய வாஸநையாலே எழும்; செந்நெற்பயிர் ஒங்கவேணுமென்று க்ருஷிபண்ணினால் அதற்குன்னே கரும்புகள் ஓங்கிப் பயன் விளைவிக்கும்படியான நிலவளம் பொருந்திய திருநறையூரில் எழுந்தருளிக்காளமேகத் திருவுருவனாய் நித்யஸூரிநாதனாய்த் துழாய்முடியனான எம்பெருமானுடைய பாதபல்லவங்களைப் பணி நெஞ்சே!

 

English Translation

O Heart!  Beautiful ripe golden sheaves of paddy grow with red lotuses in between; rows of well-laid sugarcane in plantation grow tall, in Tirunaraiyur.  The Lord of dark cloud hue, Lor of the celestials, krishna, wears a wreath of Tulasi,  Attain his tender feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top