(1518)
மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
பதவுரை
|
மான் கொண்ட தோல் மார்வில் மாணி ஆய் |
– |
கிருஷ்ணாஜினத்தை மார்பிலே தரித்த பிரமசாரியாகி |
|
மாவலி |
– |
மஹாபலி பக்கலில் |
|
மண்தான் கொண்டு |
– |
பூமியைத் தான் யாசித்துப்பெற்று |
|
தாளால் அளந்த |
– |
திருவடிகளாலே ஆக்ரமித்துக் கொண்ட |
|
பெருமானை |
– |
பெருமை பொருந்தியவனும் |
|
தேன்கொண்ட சாரல் |
– |
தேனையுடைத்தான தாழ்வரைகளையுடைய |
|
திருவேங்கடத்தானை |
– |
திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானை |
|
நான் நாடி சென்று நறையூரில் கண்டேன் |
– |
தேடிக் கொண்டுபோய் திருநறையூரில் ஸேவிக்கப் பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் சென்று நாடி = எம்பெருமான் என்னைப் பெறுதற்குப் பல அவதாரங்களெடுத்துத் தேடித்திரிந்தான்; அக்காலங்களிலே நான் விமுகனாயிருந்திட்டேன்; இன்று நான் அவனைத் தேடித்திரிய வேண்டிற்று; அறுகாதப் பயணம்போய்த் திருமலையுச்சியிலே காணவேண்டாமல், விடாய்த்த விடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமாபோலே திருநறையூரிலே காணப்பெற்றேன் என்கிறார்.
English Translation
The Lord wore a deerskin on his chest and went to Mabali as a manikin seeking a gift of land, then took the whole Earth. He is the resident of nectar-groved Tiruvenkatam, searching for him everywhere I have found him in Naraiyur.
