(1521)
ஈடா அரியாய் இரணியனை யூனிடந்த
சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை
வாடா மலர்த்துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே.
பதவுரை
|
ஓடா அரி ஆய் |
– |
நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரஸிம்ஹ ரூபியாகி |
|
இரணியன் ஊனை இடந்த |
– |
ஹிரண்யா ஸுரனுடைய உடலைக் கிழித்தொழித்தவனும் |
|
சேடு ஆர் பொழில் சூழ் |
– |
இளமைபொருந்திய சோலைகளாலே சூழப்பட்ட |
|
திருநீர்மலை யானை |
– |
திருநீர்மலையிலே ஸந்நிதி பண்ணியிருப்பவனும் |
|
வாடா மலர் துழாய் மாலை முடியானை |
– |
செவ்விகுன்றாத மலர்களையுடைய திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தள்ளவனுமான எம்பெருமானை |
|
நாள் தோறும் நாடி |
– |
நித்தியமும் தேடித்திரிந்து |
|
நறையூரில், கண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஓடா அரி போரில் பின்வாங்காத ஸிம்ஹம் என்றும், நாட்டில் நடையாடாதே அபூர்வமாகத் தோன்றின ஸிம்ஹம் என்று முரைப்ப.
English Translation
The Lord came as a man-lion and destroyed Hiranya. He is the Lord of Tirunimalai surrounded by gorves. He wears of Tulasi wreath of unfading fragrance. I have found him in Naraiyur.
