(1509)

(1509)

முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்ன ருடல்துணிய

தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில்

பனிசேர் முல்லை பல்லரும்பப் பான லொருபால் கண்காட்ட

நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.

.

பதவுரை

முனி ஆய் வந்து

–

பரசுராம முனியாய்த் திருவவதரித்து

மூவெழுகால்

–

இருபத்தொரு தலைமுறையளவும்

முடி சேர்மன்னர் உடல் துணிய

–

முடியுடையரான க்ஷத்ரியர்களின் சரீரங்கள் தொலையும்படியாக

தனி வாய் மழுவின்படை ஆண்ட

–

ஒப்பற்ற (கூர்மையான) வாயையுடைத்தான கோடாலிமைய ஆயுதமாகக் கொண்டவனும்

தார் ஆர் தோளான்

–

மாலையணிந்த திருத்தோள்களையுடையனுமான பெருமான்,-

வார் புறவில்

–

அகன்ற சோலைப்புறத்திலே

ஒருபால்

–

ஓரிடத்தில்

பனி சேர் முல்லை

–

குளிர்ந்த முல்லைப் பூக்களானவை

பல் அரும்ப

–

(அவ்வூரிலுள்ள மாதர்களின் பற்கள் போன்று அரும்பு செய்யப்பெற்றதும்

பானல்

–

கருங்குவளைப் பூக்களானவை

(ஓருபால்)

–

மற்றோரிடத்தில்

கண்காட்ட

–

(அந்த மாதர்களின்) கண்கள் போன்று அலரப் பெற்றதும்

(ஒருபால்)

–

மற்றோரிடத்தில்

நனிசேர் கமலம்

–

மிகுதியாகவுள்ள தாமரைப் பூக்களானவை

முகம் காட்டும்

–

(அந்த மாதர்களின்) முகம் போன்று விகஸிக்கப் பெற்றதுமான

நறையூர், நின்ற நம்பி-,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஈற்றடியின முற்பகுதி “நனிசேர் வயலுள் முத்தலைக்கும்” என்றும் ஓதப்பட்டுவந்ததென்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தினால் வளங்குகின்றது.  அப்பாடமே முதன்மையாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது

 

English Translation

Lord of Naraiyur came then as the sharp axe-wielding Bhrigu Rama, Vanquished twentyone mighty kings, wore a Tulasi wreath on crown Fragrant Mullai flashing a smile, Panal flowers do beckon with them, Glory-lotus shows a face, in happy groves and fields everywhere

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top