(1510)
தெள்ளார் கடல்வாய் விடவாய சினவா ளரவில் துயிலமர்ந்து
துள்ளா வருமான் விழவாளி துரந்தா னிரந்தான் மாவலிமண்
புள்ளார் புறவில் பூங்காவி புலங்கொள் மாதர் கண்காட்ட
நள்ளார் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.
பதவுரை
|
தெள் ஆர் கடல் வாய் |
– |
தெளிவுடைய திருப்பாற்கடலில் |
|
விடம் வாய |
– |
விஷயத்தை உமிழாநின்ற வாயையுடையனாய் |
|
சினம் |
– |
(பிரதிகூலர்மேல்) சீற்றமுடையனாய் |
|
வாள் |
– |
ஒளிபொருந்தியவனான |
|
அரவில் |
– |
திருவனந்தாழ்வான் மீது |
|
துயில் அமர்ந்து |
– |
சயனித்தருள்பவனும் |
|
துள்ளா வரு |
– |
(பஞ்சவடியில்) துள்ளிவிளையாடிக்கொண்டு வந்த |
|
மான் |
– |
(மாரிசனாகிற) மாயா மிருகம் |
|
விழ |
– |
மாளும் படி |
|
வாளி துரந்தான் |
– |
அம்பு எய்தவனும் |
|
மாவலி |
– |
மஹாபலியினிடத்து |
|
மண் இரந்தான் |
– |
பூமியை யாசித்தவனுமான பெருமான்- |
|
புள் ஆர் புறவில் |
– |
பட்சிகள் நிறைந்த புறர் சோலைகளிலே |
|
பூ காவி |
– |
அழகிய செங்கழுநீர்ப் பூக்கள் |
|
புலன் கொள் மாதர் |
– |
அழகிய ஸ்த்ரீகளுடைய |
|
கண் |
– |
கண்களை |
|
காட்ட |
– |
காட்டப்பெற்றதும் |
|
நள் ஆர் கமலம் |
– |
(இதழ்ச்) செறிவையுடைய தாமரைப்பூக்கள் |
|
முகம் காட்டும் |
– |
(அவர்களது) முகங்களைக் காட்டப் பெற்றதுமான |
|
நறையூர், நின்ற நம்பி-. |
– |
|
English Translation
The Lord of Naraiyur reclines in the ocean on a serpent bed, He did kill the golden deer, he did seek a gift of land. Birds abound in water tanks, where the red lily looks like the eyes And the lotus looks like the face of the dames around the town.
