(1499)

(1499)

கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,

எழுந்தினிது விளையாடு மீச னெந்தை இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும்

உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,

செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

 

பதவுரை

நெடு வெள்ளம் கொண்ட காலம்

பிரளயப் பெருவெள்ளம் உலகங்களை) ஆக்ரமித்தவொரு சமயத்திலே

கொழுகயல் ஆய்

பருத்த மத்ஸ்யரூபியாய்க் கொண்டு

குலவரையில் மீது ஓடி

குவபர்வதங்களின் மேலே போய் ஸஞ்சரித்து

அப்பால்

அதற்குமேலே

அண்டத்து

அண்டபித்தியளவும்

எழுந்து

கிளம்பி (துள்ளி)

இனிது

சுகமாக

விளையாடும்

விளையாடின

ஈசன் எந்தை

எம்பெருமானுடைய

இணை அடி கீழ்

உபயபாதங்களின் கீழ்

இனிது இருப்பீர்

சுகமாகவாழ விருப்பமுள்ளவர்களே!

இனம் வண்டு ஆலும்

கூட்டமாகத் திரண்ட வண்டுகள் நடமாடப் பெற்ற

செழு பொன்னி

அழகிய திருக்காவேரியானது

உழும் செறுவின் கரைகொணர்ந்து மேல்

உழப்படுகிற கழனிகளின் வரப்புகளின் மீது

மணி சிந்தி

ரத்னங்களைக் கொண்டுவந்து சிதறத் தள்ளியும்

உலகு எல்லாம்

ஸகல ஜனங்களும்

சந்தனமும்

சந்தனக்கட்டைகளையும்

அகிலும்

அகிற்கட்டைகளையும்

கொள்ள

எடுத்துக்கொள்ளும்படியாக

வளம் கொடுக்கும்

வளங்களைக் கொடுக்குமிடமாய்

சோழன் சேர்ந்த

சோழராஜன் பணிசெய்யப்பெற்றதான

திருநறையூர் மணி மாடம், சேர்மின்கள்.-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “குலவரையின் மீதோடியண்டத்தப்பால் எழுந்தினிது விளையாடும்”  என்றது பிரளயப் பெருவெள்ளம் நீங்குமளவும் ஓடத்தை வஹித்துக்கொண்டு விளையாடினமையைச் சொன்னவாறு.  இப்படிப்பட்ட எம்பெருமானது திருவடிகளை விடாது பணிந்திருக்கவேணுமென்னும் விருப்புடையீர்! திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள் – என்கிறார்.

“உழுஞ்செறுவின் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ளச் செழும்பொன்னி வளங்கொடுக்கும்” என்ற அடைமொழி திருநறையூரில் அந்வயிக்கவுமாம், சோழனிடத்து அந்வயிக்கவுமாம்.  பொன்னி பெருகும்படியான நாட்டுக்குத் தலைவன் என்றவாறு.  காவிரியாறு பெருகும்பொது வயல்களிலே ரத்னங்களைக் கொணர்ந்து தள்ளுவதும் சந்தனக்கட்டை அகிற்கட்டை முதலானவற்றை உலகங்கொள்ளுமாறு அடித்துக்கொண்டு வருவதும் இயல்பு.

 

English Translation

O Devotees, if you wish to live by the feet of the Lord who came as big fish over deluge waters and swan over mountains and beyond, playing jayfully, go now to Naraiyur Manimadakkoyil where the river ponni washes gems Sandal and Agli wood over field embankments, which the world comes to pick up, and where the Chola king comes to offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top