(1490)
ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட,
சேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர்,
மீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து,
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே.
பதவுரை
|
ஆனை புரவி தேரொடுகாலாள் அணிகொண்ட |
– |
யானைகளும் குதிரைகளும் தேர்களும் காலாள்களுமாக அணிவகுக்கப்பட்ட |
|
சேனை தொகையை சாடி |
– |
சேனைக் கூட்டத்தைச் சிதைத்து |
|
இலங்கை செற்றான் |
– |
இலங்காபுரியை அழித்த பெருமானுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம் (எதுவென்றால்) |
|
மீனை |
– |
மீன்களை |
|
தழுவி |
– |
(பிடிப்பதற்காக) இரண்டு கைகளாலும் அணைத்து |
|
வீழ்ந்து |
– |
(பின்பு அவற்றால் தள்ளுண்டவர்களாய்க்)கீழே விழுந்து |
|
எழும் |
– |
(பின்னும் அவற்றைப் பிடிக்க ஆசையினால்) எழுந்திருக்கிற |
|
மீனவர்க்கு |
– |
உழவர்களுக்கு |
|
அலமந்து |
– |
அஞ்சி |
|
ஆமை |
– |
ஆமையானது |
|
நானம் புதலில் |
– |
மஞ்சள் புதரிலே |
|
ஒளிக்கும் |
– |
ஒளிந்துகொள்ளுமிடமான |
|
நறையூர் |
– |
திருநறையூராம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மீனைத்தழுவி இத்யாதி) அவ்விடத்தில் நிலப்பண்பாலே மலைகள் போலே வளந்நீ திருக்குமாம் மீன்கள்; அவற்றைப் பிடிக்கிற உழவர்கள் இரண்டு கையாலுமாகத் தழுவுவர்கள்; அவை மிக்க வலியுள்ளனமையாதலால், பிடிப்பவர்களை உதறித்தள்ளிவிட்டுப் போய்விடும்; அங்ஙனம் தள்ளப்பட்டு விழுந்த உழவர்கள் மறுபடியும் அவற்றைப்பிடிக்க எழுந்திருப்பர்கள்; அதைக்கண்ட ஆமையானவை அஞ்சி வரப்பிலேநின்ற மஞ்சள் பற்றையிலே புகுந்து மறையும். இப்படிப்பட்ட வயல் வளத்தையுடையதாம் திருநறையூர்.
English Translation
The Lord destroyed the city of Lanka, battling against elephants, horses, chariots and foot-men, He resides in Naraiyur where tillers of the land fall upon mudskippers to catch them, and frightened turtles scurry into holes and borrows.
