(1479)

(1479)

கொங்குண் குழலார் கூடி யிருந்து சிரித்து, நீர்

இங்கென்னிருமி யெம்பால் வந்ததென் றிகழாதமுன்,

திங்க ளெரிகால் செஞ்சுட ராயவன் தேசுடை

நங்கள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.

 

பதவுரை

கொங்கு உண் குழலார்

மணம் பொருந்திய கூந்தலை யுடையரான மாதர்

கூடி இருந்து

கூடு்டமாகத் திரண்டிருந்து

சிரித்து

பரிஹாஸம் பண்ணி

நீர் இருமி இங்கு எம்பால் வந்தது என்

‘நீங்கள் இருமிக்கொண்டு இவ்விடத்தில் எங்களிடத்தில் வந்தது எதுக்காக?‘

என்று இகழாத முன்

என்று திரஸ்கரிப்பதற்கு முன்னே,-

திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன்

சந்திரனும் அக்நியும் காற்றும் ஸூரியனும் ஆகிய இப்பொருள்களாயிருக்கும் எம்பெருமானுடையதும்

தேசு உடை

தேஜஸ்ஸையுடையதும்

நாங்கள்

நமக்குப் புகலிடமானதுமான

நறையூர்

திருநறையூரை

நாம் தொழுதும், நெஞ்சமே! எழு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கொங்குண்குழலார் = (வண்டுகள் படிந்து) தேனைப் பருகப்பெற்ற கூந்தலையுடையார் என்னவுமாம்.  அவர்கள் பரிஹஸித்துத் தள்ளச்செய்தேயும் ‘இப்படியும் ஒரு கூந்தலழகுண்டோவுலகில்!’ என்று வருணிப்பர் காமுகர் என்பது இதில் தோன்றும்.

 

English Translation

O Heart! Before fragrant coiffured dames gather around giggling, and ask, “Coughing man, what have you come here for?” let us go to the Lord who became the Sun, the Moon the wind and the Fire, -he resides in Naraiyur, -and offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top