(1486)
கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட,
குனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன்,
பனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம்,
நனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
பதவுரை
| கனி சேர்ந்து |
– |
கோவைப்பழத்தோடொத்து |
| இலங்கு |
– |
விளங்காநின்ற |
| நல் வாயவர் |
– |
அழகிய அதரத்தையுடையரான பெண்கள் |
| காதன்மை விட்டிட |
– |
(வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக |
| உடலம் |
– |
சரீரமானது |
| குனி சேர்ந்து |
– |
கூன்வளைந்து |
| கோவில் |
– |
தடியோடுகூடி |
|
தளர்ந்து இளையாத முன்-; |
||
| விசும்பில் |
– |
ஆகாசத்தில் |
| பால் |
– |
பால் போன்று |
| பனி சேர் |
– |
குளிர்ச்சி பொருந்தியவனான |
| மதி |
– |
சந்திரனுடைய |
| கோள் |
– |
துன்பத்தை |
| விடுத்தான் |
– |
போக்கின பெருமானுடைய |
| இடம் |
– |
இருப்பிடமாய் |
| நனி சேர் |
– |
பெருமை பொருந்தியதான |
| நறையூர் |
– |
திருநறையூரை |
|
நாம் தொழுதும், நெஞ்சமே! எழு,- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நனிசேர்நறையூர் = (எம்பெருமானுக்கு) மிகவும் பொருந்தியிருக்கின்ற திருநறையூர் என்றுமாம்.
English Translation
O Heart! Before ripe-berry-lipped dames forsake their loves, the body become infirm and the back becomes bent with a staff to lean on let us go to the Lord who rid the Moon of his curse of waning –He resides in Narayiur,-and offer worship.
