(1487)
பிறைசேர் நுதலார் பேனுதல் நம்மை யிலாதமுன்,
நறைசேர் பொழில்சூழ் நறையூர் தொழுனெஞ்ச மேயென்ற,
கறையார் நெடுவேல் மங்கையர் கோன்கலி கன்றிசொல்,
மறவா துரைப்பவர் வானவர்க் கின்னர சாவாரே.
பதவுரை
|
பிறை சேர் நுதலார் |
– |
சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள் |
|
நம்மை |
– |
நம் விஷயத்தில் |
|
பேணுதல் இலாத முன் |
– |
ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே, |
|
நெஞ்சமே |
– |
‘ஓ மனமே! |
|
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற |
– |
தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’ என்று உபதேசித்தவரும். |
|
கறை ஆர் நெடு வேல் |
– |
ரத்தக்கரை நிரம்பிய நீண்ட வேற்படையை யுடையவரும் |
|
மங்கையர் கோன் |
– |
திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான |
|
கலிகன்றி |
– |
ஆழ்வாருடைய |
|
சொல் |
– |
இந்த ஸ்ரீஸூக்திகளை |
|
மறவாது உரைப்பவர் |
– |
மறவாமல் ஓதுமவர்கள் |
|
வானவர்க்கு |
– |
நித்ய ஸூரிகளுக்கும் |
|
இன் அரசு ஆவர் |
– |
மேற்பட்டவர்களாவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கறையார் நெடுவேல் பகவத்பாகவதவிரோதிகளை நிரஸநம் பண்ணின ரத்தக்கறை கழுவுவதற்கும் அவகாசமின்றியே வியாபரிக்குமாம் திருமங்கையாழ்வாருடைய வேல்.
English Translation
O Heart! “Before crescent-eyebrowed dames laugh, let us offer worship to the Lord-of-groves-Naraiyur”, -these songs are by spear wielding Mangai king Kaliyan. Those who master it will rule the world of celestials forever.
