(1635)
மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,
உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்
செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே.
பதவுரை
|
கிளி |
– |
கிளிகளானவை |
|
மடவார் |
– |
ஸ்த்ரீகளினுடைய |
|
செவ்வாய் |
– |
சிவந்த வாயில் நின்று முண்டான |
|
மொழி |
– |
சொற்களை |
|
பயிலும் |
– |
ஆவ்ருத்திபண்ணாநின்ற |
|
சிறுபுலியூர், |
– |
சலசயனத்து-; |
|
ஐ வாய் |
– |
ஐந்து வாயையுடைய |
|
அரவு அணை மேல் |
– |
அதிசேஷனாகிற சயனத்தில் மீது |
|
உறை |
– |
உறைகின்ற |
|
அமலா |
– |
நின்மலனே! |
|
மை ஆர் |
– |
அயணிந்ததாய் |
|
வரி |
– |
ரேகைகளையுடைத்தாய் |
|
நீலம் மலர் |
– |
கரு நெய்தல் பூப்போன்றதான |
|
கண்ணார் |
– |
கண்ணையுடையரான மாதர்களிடத்திலே |
|
மனம் |
– |
மனத்தை |
|
விட்டிட்டு |
– |
விட்டொழித்து |
|
உய்வான் |
– |
உஜ்ஜீவிப்பதற்காக |
|
உன கழலே |
– |
உனது திருவடிகளையே |
|
தொழுது எழுவேன் |
– |
வணங்கியெழுகின்றேன்; |
|
அருளாய் |
– |
(அடியேன் மீது) க்ருபை செய்தருள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாதர்களின் கண்ணழகிலீடுபட்டு அழிந்துபோகாமே உன்திறத்திலீடுபட்டு உய்வு பெறவேண்டி, சிறுபுலியூர்ச் சலசயனத்தெம்பிரானே! உன்னைத் தொழுகின்றேன்; உபேக்ஷியாமல் அருள்புரிய வேணுமென்கிறார்.
கிளிமடவார் செவ்வாய்மொழிபயிலும் இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; கிளிபோன்ற மடவாருடைய சிவந்த வாயில் நின்று முண்டான இன் சொற்களானவை பயிலும் – நிரம்பியிருக்கப்பெற்ற சிறுபுலியூர் என்றும்; கிளிகளானவை மடவாருடைய செவ்வாய்மொழிகளை அநுவாதம் செய்யப்பெற்ற சிறுபுலியூர் என்றும்.
English Translation
O Lord reclining on a five-hooded serpent bed in Sirupuliyur Salasayanam, where parrots learn sweet talk from the coral-lipped maidens! Pray grace that I may turn my heart from the dark-lotus-eyed dames to the lotus of your feet, and offer worship for elevation of spirit.
