(1635)

(1635)

மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,

உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்

செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,

ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே.

 

பதவுரை

கிளி

கிளிகளானவை

மடவார்

ஸ்த்ரீகளினுடைய

செவ்வாய்

சிவந்த வாயில் நின்று முண்டான

மொழி

சொற்களை

பயிலும்

ஆவ்ருத்திபண்ணாநின்ற

சிறுபுலியூர்,

சலசயனத்து-;

ஐ வாய்

ஐந்து வாயையுடைய

அரவு அணை மேல்

அதிசேஷனாகிற சயனத்தில் மீது

உறை

உறைகின்ற

அமலா

நின்மலனே!

மை ஆர்

அயணிந்ததாய்

வரி

ரேகைகளையுடைத்தாய்

நீலம் மலர்

கரு நெய்தல் பூப்போன்றதான

கண்ணார்

கண்ணையுடையரான மாதர்களிடத்திலே

மனம்

மனத்தை

விட்டிட்டு

விட்டொழித்து

உய்வான்

உஜ்ஜீவிப்பதற்காக

உன கழலே

உனது திருவடிகளையே

தொழுது எழுவேன்

வணங்கியெழுகின்றேன்;

அருளாய்

(அடியேன் மீது) க்ருபை செய்தருள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மாதர்களின் கண்ணழகிலீடுபட்டு அழிந்துபோகாமே உன்திறத்திலீடுபட்டு உய்வு பெறவேண்டி, சிறுபுலியூர்ச் சலசயனத்தெம்பிரானே! உன்னைத் தொழுகின்றேன்; உபேக்ஷியாமல் அருள்புரிய வேணுமென்கிறார்.

கிளிமடவார் செவ்வாய்மொழிபயிலும் இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; கிளிபோன்ற மடவாருடைய சிவந்த வாயில் நின்று முண்டான இன் சொற்களானவை பயிலும் – நிரம்பியிருக்கப்பெற்ற சிறுபுலியூர் என்றும்; கிளிகளானவை மடவாருடைய செவ்வாய்மொழிகளை அநுவாதம் செய்யப்பெற்ற சிறுபுலியூர் என்றும்.

 

English Translation

O Lord reclining on a five-hooded serpent bed in Sirupuliyur Salasayanam, where parrots learn sweet talk from the coral-lipped maidens!  Pray grace that I may turn my heart from the dark-lotus-eyed dames to the lotus of your feet, and offer worship for elevation of spirit.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top