(1598)
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே.
பதவுரை
|
முன் |
– |
முன்னொருகால், |
|
சிங்கம் அது ஆய் |
– |
நரசிம்ஹ ரூபியாய்க்கொண்டு |
|
அவுணன் |
– |
இரணியாசுரனுடைய |
|
திறல் ஆகம் |
– |
வலிமிக்க மார்வை |
|
கீண்டு |
– |
இருபிளவாக்கி |
|
உகந்த |
– |
திருவுள்ளமுவந்தவனும் |
|
சங்கம் இடத்தானை |
– |
சங்கை இடத்திருக்கையிலுடையவனும் |
|
தழல் ஆழி வலத்தானை |
– |
தீக்ஷ்ணமான திருவாழியை வலத்திருக்கையிலுடையவனும் |
|
செம் கமலத்து அயன் அனையார் |
– |
செவ்விய (திருநாயிக்) கமலத்திற் பறந்த பிரமனைப்போன்ற பிராமணர்கள் (வாழ்கிற) |
|
தென் அழுந்தையில் மன்னி நின்ற |
– |
அழகிய திருவழுந்தூரிலே நித்யவாஸம் செய்பவனும் |
|
அம் கமலம் கண்ணனை |
– |
அழகிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையனுமான ஆமருவியப்பனை |
|
அடியேன் கண்டு கொண்டேன் |
– |
அடியேன் ஸேவிக்கப்பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நரசிங்கமாய்” என்னாமல் ‘சிங்கமதாய்’ என்றது என்னென்னில்; முகமே முக்கிய மாதலால், அதுதான் சிங்கவுருவமாதலால் சொல்லிற்று.
செங்கமலத்தயனனையார் = அவ்வூரிலுள்ளவர்கள் நான்முகனை யொத்திருக்கின்றார்கள் என்றால் ‘எந்த விஷயத்தில்? என்று கேள்வி; ஓயாது வேதமோதும் விஷயத்தில் என்றாவது, ஸ்ருஷ்டியை நடத்தும் விஷயத்தில் என்றாவது கொள்க. என்று ஸ்தோத்ரரத்ந ஸ்ரீஸூக்திகாண்க.
English Translation
The Lord of discus and conch came as a man-lion and destroyed Hiranya’s strong chest. Standing with beautiful lotus eyes, surrounded by Bramha-like Vedic seers, he resides in beautiful Alundur, I have seen him today.
