(1598)

(1598)

சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,

சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,

செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,

அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே.

 

பதவுரை

முன்

முன்னொருகால்,

சிங்கம் அது ஆய்

நரசிம்ஹ ரூபியாய்க்கொண்டு

அவுணன்

இரணியாசுரனுடைய

திறல் ஆகம்

வலிமிக்க மார்வை

கீண்டு

இருபிளவாக்கி

உகந்த

திருவுள்ளமுவந்தவனும்

சங்கம் இடத்தானை

சங்கை இடத்திருக்கையிலுடையவனும்

தழல் ஆழி வலத்தானை

தீக்ஷ்ணமான திருவாழியை வலத்திருக்கையிலுடையவனும்

செம் கமலத்து அயன் அனையார்

செவ்விய (திருநாயிக்) கமலத்திற் பறந்த பிரமனைப்போன்ற  பிராமணர்கள் (வாழ்கிற)

தென் அழுந்தையில் மன்னி நின்ற

அழகிய திருவழுந்தூரிலே நித்யவாஸம் செய்பவனும்

அம் கமலம் கண்ணனை

அழகிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையனுமான ஆமருவியப்பனை

அடியேன் கண்டு கொண்டேன்

அடியேன் ஸேவிக்கப்பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “நரசிங்கமாய்” என்னாமல் ‘சிங்கமதாய்’ என்றது என்னென்னில்; முகமே முக்கிய மாதலால், அதுதான் சிங்கவுருவமாதலால் சொல்லிற்று.

செங்கமலத்தயனனையார் = அவ்வூரிலுள்ளவர்கள் நான்முகனை யொத்திருக்கின்றார்கள் என்றால் ‘எந்த விஷயத்தில்? என்று கேள்வி; ஓயாது வேதமோதும் விஷயத்தில் என்றாவது, ஸ்ருஷ்டியை நடத்தும் விஷயத்தில் என்றாவது கொள்க.  என்று ஸ்தோத்ரரத்ந ஸ்ரீஸூக்திகாண்க.

 

English Translation

The Lord of discus and conch came as a man-lion and destroyed Hiranya’s strong chest.  Standing with beautiful lotus eyes, surrounded by Bramha-like Vedic seers, he resides in beautiful Alundur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top