(1599)

(1599)

கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,

மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,

ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,

தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே

 

பதவுரை

கோ ஆனார்

க்ஷத்ரியர்களென்று பேர் பெற்றவரடங்கலும்

மடிய

மடிந்தொழியும்படி

கொலை ஆர் மழு

கொலைத்தொழில் வல்ல மழுப்படையை

கொண்டருளும்

(திருக்கையில்) ஏந்தியுள்ளவனும்

மூவா வானவனை

கிழத்தனம் முதலிய விகாரங்களில்லாத தேவாதி தேவனும்

முழுநீர் வண்ணனை

கடல்போன்ற திருநிறத்தை யுடையவனும்

அடியார்க்கு

அடியார் விஷயத்திலே

ஆ ஆ என்று இரங்கி

ஐயோவென்று கிருபை பண்ணி

தென் அழுந்தையில் மன்னி நின்ற -;

தேவாதி தேவனை

தேவர்கட்கும் சிறந்த தேவனுமான பெருமானை

யான் கண்டு கொண்டு

அடியேன் ஸேவித்து

திளைத்தேன்

களிக்கப்பெற்றென்.

 

English Translation

The Lord wielded on axe and came to destroy twentyone mighty kings yore.  The eternally youthful ocean-hued Lord of the sky world, he is Devadi Deva, the Lord of gods, enquiring of his devotees well-being. He resides in beautiful Alundur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top