(1600)

(1600)

உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,

விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,

அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்

உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.

 

பதவுரை

உடையானை

ஸர்வஸ்வாமியானவனும்

ஒலி நீர் உலகங்கள் படைத்தானை

கடல் சூழ்ந்த உலகங்களைப் படைத்தவனும்

அன்று

பாணாஸுர யுத்தத்தினன்று

விடையான் ஓட

பரமசிவன் தோற்று ஓடும்படி

விறல் ஆழி

வலிமிக்க திருவாழியை

விசைத்தானை

வேகமாகப் பிரயோகித்தவனும்

அடையார் தென் இலங்கை அழித்தானை

பகைவர் நிறைந்திருக்கிற தென்னிலங்கையை அழியச்செய்தவனும்

அணி அழுந்தூர் உடையானை

அழகிய திருவழுந்தூரை இருப்பிடமாக வுடையனுமான பெருமானை

அடியேன் அடைந்து-;-

உய்ந்து போனேன்

உஜ்ஜீவித்து விட்டேன்.

 

English Translation

The master, the maker of the worlds, the wielder of the discus that pur the bull-rider Siva to flight, the destroyer of evil Lanka, resides in beautiful Alundur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top