(1601)

(1601)

குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று

பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,

அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்

நின்றானை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே.

 

பதவுரை

குன்றால்

–

கோவர்த்தந கிரியைக்கொண்டு

மாரி

–

பெருமழையை

தடுத்தவனை

–

தடை செய்தவனும்

குலம் வேழம்

–

சிறந்தகுலத்துப் பிறந்த கஜேந்திராழ்வான்

பொன்றாமை

–

(முதலைவாய்ப்பட்டு) முடிந்து போகாமல்

அன்று

–

அக்காலத்து

அதனுக்கு அருள்செய்த

–

அதற்கு அருள்புரிந்தவனும்

போர் ஏற்றை

–

போர் செய்யவல்ல காளை போன்றவனும்

ஆவின் நறு நெய்

–

பசுவின மண நெய்யை

அமர்ந்து உண்ண

–

விரும்பியமுதுசெய்ய

அன்று

–

அன்றேபிடித்து

அணி அழுந்தூர் நின்றானை

–

அழகிய திருவழுந்தூரில் நிற்பவனமான பெருமானை

அடியேன் கண்டுகொண்ட-;

நிறைந்தேன்

–

குறையற்றவனானேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொன்றாமை – பொன்றுதல் – அழித்தல்.  அதனக்கு அருள்செய்த – அதுதன் கையிற் பறித்து வைத்துக்கொண்டிருந்த தாமரைப்பூவைத் திருவடிகளிலே ஸமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிற அருளைச் செய்தவனென்க.  திருவாய்ப்பாடியின் ஸ்தானத்திலே திருவழுந்தூரைத் திருவுள்ளம் பற்றினானென்பது மூன்றாமடியின் கருத்து.

 

English Translation

The Lord who lifted a mount against a hailstorm, the Lord who saved the distressed elephant, the Lord who emerged victorious in war, the Lord who ate butter in stealth, resides in beautiful Alundur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top