(1601)
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றானை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே.
பதவுரை
|
குன்றால் |
– |
கோவர்த்தந கிரியைக்கொண்டு |
|
மாரி |
– |
பெருமழையை |
|
தடுத்தவனை |
– |
தடை செய்தவனும் |
|
குலம் வேழம் |
– |
சிறந்தகுலத்துப் பிறந்த கஜேந்திராழ்வான் |
|
பொன்றாமை |
– |
(முதலைவாய்ப்பட்டு) முடிந்து போகாமல் |
|
அன்று |
– |
அக்காலத்து |
|
அதனுக்கு அருள்செய்த |
– |
அதற்கு அருள்புரிந்தவனும் |
|
போர் ஏற்றை |
– |
போர் செய்யவல்ல காளை போன்றவனும் |
|
ஆவின் நறு நெய் |
– |
பசுவின மண நெய்யை |
|
அமர்ந்து உண்ண |
– |
விரும்பியமுதுசெய்ய |
|
அன்று |
– |
அன்றேபிடித்து |
|
அணி அழுந்தூர் நின்றானை |
– |
அழகிய திருவழுந்தூரில் நிற்பவனமான பெருமானை |
|
அடியேன் கண்டுகொண்ட-; |
||
|
நிறைந்தேன் |
– |
குறையற்றவனானேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பொன்றாமை – பொன்றுதல் – அழித்தல். அதனக்கு அருள்செய்த – அதுதன் கையிற் பறித்து வைத்துக்கொண்டிருந்த தாமரைப்பூவைத் திருவடிகளிலே ஸமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிற அருளைச் செய்தவனென்க. திருவாய்ப்பாடியின் ஸ்தானத்திலே திருவழுந்தூரைத் திருவுள்ளம் பற்றினானென்பது மூன்றாமடியின் கருத்து.
English Translation
The Lord who lifted a mount against a hailstorm, the Lord who saved the distressed elephant, the Lord who emerged victorious in war, the Lord who ate butter in stealth, resides in beautiful Alundur, I have seen him today.
